Sunday, December 29, 2013
ராமேஸ்வரம்::ராமேஸ்வரத்தில் இன்று இலங்கை தமிழர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இதுகுறித்து போலீஸ்தரப்பில் கூறியதாவது
டாஸ்மாக் கடை அருகே சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் சுற்றி திரிந்த ஒருவரை காவல் ஆய்வாளர்
பொன் முனியாண்டி பிடித்து விசாரித்ததில் அவர் இலங்கை தமிழர் அபூர்வ நாதன் என்பது தெரிய வந்தது. அவர் கையில் விசா உட்பட எந்த ஆவணமும் இல்லை மேலும் அவரிடத்தில் 800 அமெரிக்க டாலார் இருந்தது தெரியவந்தது.
2000ஆம் ஆண்டு இந்தியாவுக்கு வந்த தான் பெங்களூர் மற்றும் சென்னையில் தங்கியிருந்துவந்துள்ளதாக பொலிஸாரின் விசாரணையில் சந்தேக நபர் தெரிவித்துள்ளார்.
மேலும், தமிழ்நாட்டின் தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்த பெண் ஒருவரை இவர் திருமணம் செய்துள்ளதாகவும் விசாரணையிலிருந்து தெரியவந்துள்ளது. இவரிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் பொலிஸார் கூறினர்.
மூன்று இலங்கையர்கள் மதுரை விமான நிலையத்தில் கைது!
ஒரு கிலோகிராமுக்கு மேற்பட்ட தங்கத்தை வைத்திருந்த மூன்று இலங்கையர்கள் மதுரை விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களிடமிருந்து 36 இலட்சம் ரூபா பெறுமதியான தங்கம் கைப்பற்றப்பட்டாக தி ஹிந்து பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட இலங்கையர்களில் 2 பெண்களும் அடங்குகின்றனர்.
சந்தேகநபர்களின் பயணப் பொதிகளை எக்ஸ்ரே பரிசோதனைக்கு உட்படுத்தியபோது அவற்றினுள் மறைத்து வைக்கப்பட்டிருந்த தங்கம் கண்டுபிடிக்கப்பட்டதாக மதுரை சுங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
No comments:
Post a Comment