Monday, December 30, 2013

ஓட்டமாவடியில் வியாபார நிலையங்களை பரிசோதிக்கும் வேலைத்திட்டம்!

Monday, December 30, 2013
இலங்கை::பண்டிகைக் காலத்தில் நுகர்வோருக்கு பாவனைக்கு உகந்த பொருட்களை வழங்கம் நோக்கில் வியாபார நிலையங்களை பரிசோதிக்கும் வேலைத்திட்டம் (28.12.2013) சனிக்கிழமை ஓட்டமாவடி பிரதேசத்தில் இடம் பெற்றது.

ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எஸ்.ரீ.நஜீப்கானின் ஆலோசனையில் பதில் மேற்பார்வை பொதுச் சுகாதார பரிசோதகர் ஏ.எல்.எம்.நஷீர் தலைமையில் சென்ற பொதுச் சுகாதார பரிசோதகர் ஏ.ஆர் ஹக்கீம் மற்றும் வாழைச்சேனை பொலிஸார் ஆகியோர் உணவகங்கள்,
சில்லரைக்கடை, மரக்கறிக்கடை, பழக்கடை போன்றவற்றை பரிசோதித்தனர்.

இதன் போது காலவாதியான மற்றும் பழுதடைந்த பொருட்கள் கைப்பற்றப்பட்டதுடன், வியாபாரிகள் எச்சரிக்கப்பட்டதாகவும் பதில் மேற்பார்வை பொதுச் சுகாதார பரிசோதகர் ஏ.எல்.எம்.நஷீர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment