Monday, December 30, 2013

இலங்கை, இந்திய இரு நாட்டு மீனவர்கள் ஜன.20 ல் பேச்சு வார்த்தை: மத்திய வர்த்தகத் துறை இணை அமைச்சர் சுதர்சன நாச்சியப்பன்!

Monday, December 30, 2013
ராமநாதபுரம்::இலங்கை, இந்திய மீனவர் விவகாரத்தில், நல்லுறவு ஏற்படுத்த, ஜன.20ல், சுமூக பேச்சுவார்த்தை நடக்கிறது, என, மத்திய வர்த்தகத் துறை இணை அமைச்சர் சுதர்சன நாச்சியப்பன் கூறினார்.
ராமநாதபுரத்தில் அவர் கூறியதாவது: இந்தியாவின் பொது வினியோக திட்ட செயல்பாடுகள், கம்ப்யூட்டர் மயமாக்கபடுவதால், 6 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். இலங்கை கடல் பகுதிகளில், இந்திய மீனவர் சுதந்திரமாக மீன்பிடிக்க, இரு நாட்டு மீனவர்கள் இடையே, ஜன., 20 ல், சென்னையில் சுமூக பேச்சுவார்த்தை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
 
தமிழக சிறைகளிலுள்ள இலங்கை மீனவர்கள், துன்புறுத்தப்படுவதால், மீன்பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்களை, இலங்கை ராணுவம் தாக்குகிறது, என்றார்.

No comments:

Post a Comment