Monday, December 30, 2013
புதுடெல்லி::எல்லை பகுதிகளை கண்காணிக்க ஆளில்லா விமானங்களை கடந்த 1990-களில் இந்தியா
பயன்படுத்த தொடங்கியது. அப்போது, 'சர்ச்சர் மார்க்-1' மற்றும் 'சர்ச்சர்
மார்க்-2' ரக ஆளில்லா விமானங்களை இந்தியா பயன்படுத்தியது.
அந்த விமானங்கள் 15 ஆயிரம் அடி உயரம் வரை மட்டுமே பறந்து, கண்காணிப்பு பணியில் ஈடுபடும். பின்னர், இஸ்ரேல் நாட்டில் இருந்து வாங்கப்பட்ட 'ஹெரான்' ரக ஆளில்லா விமானங்களை இந்தியா பயன்படுத்த தொடங்கியது. இந்த ரக விமானங்கள், 30 ஆயிரம் அடி உயரத்தில் பறந்து கண்காணிக்க வல்லவை.
இந்த 'ஹெரான்' ரகத்தைச் சேர்ந்த 40-க்கும் மேற்பட்ட விமானங்களை இந்திய ராணுவம் ஏற்கனவே வைத்துள்ளது. அவற்றை பாகிஸ்தான் எல்லையிலும், சீன எல்லையிலும் கண்காணிப்பு பணியில் இந்தியா ஈடுபடுத்தி உள்ளது. இதுபோல், 'சர்ச்சர்' ரகத்தைச் சேர்ந்த சுமார் 100 விமானங்களையும் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தி உள்ளது.
இந்நிலையில், பாகிஸ்தான், சீன எல்லைகளில் கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்தும் நோக்கத்தில், மேலும் 15 'ஹெரான்' ரக ஆளில்லா விமானங்களை வாங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. பிரதமர் மன்மோகன்சிங் தலைமையில் நடைபெற்ற பாதுகாப்புக்கான மந்திரிசபை கமிட்டி கூட்டத்தில் இதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
இஸ்ரேல் நாட்டிடம் இருந்து ரூ.1,200 கோடி செலவில் இந்த விமானங்கள் வாங்கப்படுகின்றன. இவற்றையும் பாகிஸ்தான், சீன எல்லை பகுதிகளில் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
இந்த விமானங்களை மிகவும் தூரத்தில் இருந்து செயற்கைக்கோள் தகவல் தொடர்பு சாதனம் மூலம் இயக்க முடியும்.

No comments:
Post a Comment