Monday, December 30, 2013

தயா மாஸ்டர் மிகவும் நல்ல மனிதர் புலிகளை குறை கூறிய அனந்தியின் நோக்கம்?!!

Monday, December 30, 2013
இலங்கை::எழிலன் திருகோணமலை மாவட்டத்தில் அரசியல் துறைப் பொறுப்பாளராக இருந்த பொழுது எமக்கு விடுதலைப் புலிகள் எந்தவிதமான அடிப் படைத் தேவையான உதவிகளையும் வழங்க வில்லை என்று புலிகள் மீது முதற் தடவையாக குற்றம் சுமத்தியிருக்கிறார் வட மாகாண சபையின் உறுப்பினர் அனந்தி எழிலன்.
 
அக்காலப் பகுதியில் நாம் எமக்கு ரெலி போன் வசதிகளைச் செய்யுமாறு தயா மாஸ்டரிடம் கோரிய பொழுது அவர் தனது தனிப்பட்ட முயற்சியினால் எமக்கு பல வகையிலும் உதவினார் என வடக்கு அனந்தி தெரிவித்தார். நாங்கள் எழிலன் இயக்கத்தில் இருந்த காலத்திலிருந்து மிகவும் நெருக்கமான நண்பர்கள். தயா மாஸ்ரர் மிகவும் நல்ல மனிதர் என்றார்.
 
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் தொடர்ந்தும் அவருக்கான அடிப்படை வசதிகள் புறக்கணிப்பட்டு வரும் நிலையில் அனந்தி, தற்போது அரசாங்கக் கட்சியுடன் இணைந்து செயற்பட்டு வரும் தயா மாஸ்டர் ஊடாக ஏதேனும் அரச வசதி வாய்ப்புக்களை எதிர்பார்த்து இக்கருத்தினை முன்வைத்திருக்கலாம் எனச் சிலர் தெரிவித்தனர். வடமராட்சி கிழக்கில் இடம்பெற்ற வைபவமொன்றில் தயா மாஸ்டருடன் நீண்ட நேரம் உரையாடியமை தொடர்பாக கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

No comments:

Post a Comment