Monday, December 30, 2013

தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கங்களுடன் பேச்சுவார்த்தை – மாகாண போக்குவரத்து அமைச்சர்!

Monday, December 30, 2013
இலங்கை::வவுனியா, கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு ஆகிய தனியார் பேருந்து போக்குவரத்து தொடர்பில் அண்மையில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்துவதற்கு வடக்கு மாகாண போக்குவரத்து அமைச்சர்  பா.டெனிஸ்வரன் அவர்களினால் விடுக்கப்பட்ட அழைப்பின் பேரில் (29-12-2013) நேற்று மன்னார் நகர சபை ஒன்றுகூடல் மண்டபத்தில் வட மாகாணத்தைச் சேர்ந்த 5 மாவட்டங்களினதும், தனியார் போக்குவரத்து பேருந்து உரிமையாளர்களின் சங்கங்களினதும் நிர்வாக உறுப்பினர்களுக்கும், ஒன்றிய உறுப்பினர்களுக்குமான விசேட கலந்துரையாடல் இடம்பெற்றது.
 
இந்த ஒன்றுகூடலுக்கு பாராளுமன்ற உறுப்பினர் சி.ஸ்ரீதரன் அவர்களும் வட மாகாண சபை உறுப்பினர் ரவிகரன் அவர்களும் கலந்துகொண்டனர். சுமார் 5 மணித்தியாலங்கள் இடம்பெற்ற இக் கலந்துரையாடலின் பின்னர், ஜனவரி 31 வரை வவுனியாவைச் சேர்ந்த 6 பேருந்துகள் பரந்தன் ஊடாக புதுக்குடியிருப்புக்கு செல்வதற்கு தற்கால அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில், இது தொடர்பான தீர்வு எதிர்வரும் ஜனவரி 31 க்குள் இன்னுமொரு கலந்துரையாடலுடன் எடுக்கப்படும் எனவும் வடக்கு மாகாண போக்குவரத்து அமைச்சர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment