Saturday, December 28, 2013

ஜனாதிபதி மகிந்தராபக்ஷ அடுத்து மாதம் இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீன் ஆகிய நாடுகளுக்கு விஜயம்!


Saturday, December 28, 2013
இலங்கை::ஜனாதிபதி மகிந்தராபக்ஷ அடுத்து மாதம் இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீன் ஆகிய நாடுகளுக்கு விஜயத்தை மேற்கொள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

நான்கு நாட்கள் விஜயமாக அங்கு செல்லும் அவர், இரண்டு நாடுகளிலும் தலா இரண்டு நாட்கள் தங்கி இருப்பார் என்று தெரிவிக்கப்படுகிறது.

இதன் போது ஜனாதிபதி இஷ்ரேலின் ஜனாதிபதி சிமோன் பெரேஸ் மற்றும் பாலஸ்தீன் ஜனாதிபதி மொஹமூட் அபாஸ் ஆகியோரை சந்திக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த பேச்சுவார்த்தைகளின் போது, இலங்கைக்கும் இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீன் ஆகிய நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக தொடர்புகளை அதிகரித்துக் கொள்வதற்கான வழிமுறைகள் தொடர்பில் கலந்துரையாடப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன் கலாசாரம், சுற்றுலா, மற்றும் தொழில் வாய்ப்புகள் தொடர்பிலும் பேச்சுவார்த்தைகள் நடத்தப்படவுள்ளன.

ஜனாதிபதியின் இந்த விஜயத்தின் போது, இலங்கையின் பிரதிநிதிகள் குழு ஒன்றும் ஜனாதிபதியுடன் செல்லும் செல்லும் என்று தெரிவிக்கப்படுகிறது.

No comments:

Post a Comment