Thursday, December 5, 2013

பரபரப்பான சூழ்நிலையில் பாராளுமன்றம் இன்று கூடுகிறது!

Thursday, December 05, 2013
புதுடில்லி::சூழ்நிலையில் பாராளுமன்றம் இன்று கூடுகிறது. இன்று தொடங்கும் இந்த கூட்டத்தொடர் வரும் 20_ம் தேதி வரை நீடிக்கும். இந்த கூட்டத்தொடரில் மொத்தம் 38 மசோதாக்கல் நிறைவேற்றப்பட உள்ளன.
பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கி வரும் 20_ம் தேதி வரை நடக்க உள்ளது. இருப்பினும் மொத்தம் 12 நாட்கள் மட்டுமே அலுவல் நாட்களாக இருக்கும். இக்கூட்டத்தொடரில் முக்கியமான 38 மசோதாக்கல் நிறைவேற்றப்பட உள்ளன.
 
இக்கூட்டத்தொடரில் இலங்கை தமிழர் பிரச்சினை, தமிழக மீனவர்கள் தொடர்ந்து இலங்கை கடற்படையால் தாக்கப்படும் பிரச்சினை, எதிர்ப்புகளை மீறி காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்ற விவகாரம், வகுப்புவாத வன்முறை தடுப்பு மசோதா போன்ற பல பிரச்சினைகளை எழுப்ப அ.தி.மு.க.திட்டமிட்டுள்ளது. இதேபோல் காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்ற விவகாரம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை சபையில் எழுப்ப தி.மு.க.வும் திட்டமிட்டுள்ளது.
 
விலைவாசி உயர்வு, அடிக்கடி உயர்த்தப்படும் பெட்ரோல்,டீசல் விலை உயர்வு உள்ளிட்ட மக்கள் பிரச்சினைகளை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன. இதனால் இந்த கூட்டத்தொடரில் அனல் பறக்கும்  என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
இன்று துவங்கும், பார்லிமென்ட் குளிர்கால கூட்டத்தொடரில், விலைவாசி உயர்வு, ஊழல், பணவீக்கம் போன்ற பிரச்னைகளை எழுப்பி, ஆளும் கட்சிக்கு நெருக்கடி கொடுக்க, எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன.

பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே, பார்லிமென்ட் குளிர்கால கூட்டத்தொடர், இன்று துவங்கி, வரும், 20ம் தேதி வரை நடக்கிறது. முதல் நாளான இன்று, சமாஜ்வாதி கட்சியின் ராஜ்யசபா எம்.பி., மோகன் சிங், பா.ஜ., லோக்சபா எம்.பி., முராரிலால் சிங் ஆகியோரின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து, இரண்டு சட்டசபைகளும் ஒத்திவைக்கப்படும். எனவே, இன்று, அலுவல்கள் நடக்க வாய்ப்பில்லை.

நெருக்கடி உண்டு : நாளை மறுநாளில் இருந்து, கூட்டத்தொடர், முழுமையாக நடக்க வாய்ப்பிருந்தாலும், பா.ஜ., இடதுசாரி கட்சிகள் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள், பல்வேறு பிரச்னைகளை எழுப்பி, அரசுக்கு கடும் நெருக்கடி கொடுக்க காத்திருக்கின்றன. அத்தியாவசியப் பொருட்களின் விலைவாசி உயர்வு, பணவீக்க உயர்வு, நிலக்கரி ஊழல் போன்ற பிரச்னைகளை, எதிர்க்கட்சிகள் எழுப்பவுள்ளன. தெலுங்கானா பிரச்னையும், குளிர்கால கூட்டத்தொடரில், விஸ்வரூபம் எடுக்கும் என, தெரிகிறது. 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு ஊழல் குறித்த விஷயத்தில், பிரதமர் மன்மோகன் சிங், நிதி அமைச்சர் சிதம்பரம் ஆகியோரை அழைத்து, பார்லிமென்ட் கூட்டு குழு, விசாரணை நடத்தாதது குறித்தும், எதிர்க்கட்சிகள் பிரச்னை எழுப்பவுள்ளன. உலக வர்த்தக மைய கூட்டத்தில், உணவு பாதுகாப்பு குறித்து, இந்தியாவின் நிலை பற்றியும், இடதுசாரி கட்சிகள், கேள்வி எழுப்ப திட்டமிட்டுள்ளன.

தெலுங்கானா மசோதா? : இதுதவிர, இந்த கூட்டத்தொடரில், முக்கிய மசோதாக்களை நிறைவேற்ற வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, தெலுங்கானா தனி மாநிலம் அமைப்பது தொடர்பான மசோதா தாக்கல் செய்யப்படுமா என, இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. பெண்கள் மசோதா, லோக்பால் மசோதா ஆகியவை, ஒரு சபையில் மட்டுமே, நிறைவேற்றப்பட்டு உள்ளன. மற்றொரு சபையில் நிறைவேற்ற வேண்டியுள்ளது. இந்நிலையில், ஐந்து மாநில சட்டசபை தேர்தல்கள் நடந்து முடிந்துள்ள நிலையில், அவற்றின் முடிவுகள், 8ம் தேதி வெளியாகின்றன. இந்த விவகாரமும், கூட்டத்தொடரில் எதிரொலிக்கும் என, கருதப்படுகிறது.

No comments:

Post a Comment