Saturday, December 28, 2013
இலங்கை::மூன்று வருட காலமாக கள்ள நோட்டுக்களை அச்சிட்டு விநிளூயாகித்து வந்ததாகக் கூறப்படும் 29 வயது இளைஞரொருவர் 5000 ரூபா, 1000 ரூபா 500 ரூபா கள்ள நோட்டுக்கள் 184 உடன் தெற்கு களுத்துறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த இளைஞர் இதற்கு முன்னர் கள்ள நோட்டுக்களுடன் மன்னார் பிரதேசத்தில் வைத்து இரகசிய பொலிஸாரால் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டவரென தெற்கு களுத்துறை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
களுத்துறை நகருக்கு வந்த நபரொருவர் நேற்று முன்தினம் மாலை 500 ரூபா நோட்டொன்றைக் கொடுத்து தயிர் முட்டிகள் இரண்டைக் கொள்வனவு செய்துள்னர். வர்த்தகர் 500 ரூபா கள்ள நோட்டு என்பதை அறிந்து கொண்டு அந்த நபரைப் பிடிக்க முயற்சித்தபோது அந்த நபர் மோட்டார் சைக்கிளில் ஏறி தப்பிச் சென்றுள்னர்.
வர்த்தகர் இது குறித்து களுத்துறை பொலிஸ் நிலையத்துக்கு தகவல் வழங்கியதை அடுத்து பொலிஸார் விரட்டிச் சென்று அந்த நபரைக் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட நபரை சோதனையிட்டபோது அவர் காற்சட்டைப் பையிலிருந்து 136 ஐந்நூறு ரூபா கள்ள நோட்டுக்கள் கைப்பற்றப்பட்டன.
சந்தேக நபரை விசாரணைக்குட்படுத்தியபோது வாத்துவ, வெல்லகொட பிரதேசத்திலுள்ள அவரது வீட்டிலிருந்து மேலும் 40 ஐந்நூறு ரூபா கள்ள நோட்டுக்களும் இரண்டு 5000 ரூபா கள்ள நோட்டுக்களும் ஐந்து 1000 ரூபா கள்ள நோட்டுக்களும் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சந்தேக நபரை களுத்துறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்செய்ய பொலிஸார் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
No comments:
Post a Comment