Saturday, December 28, 2013

ரஸ்ய பெண்ணுக்கு திருமண ஆசை காட்டி ஏமாற்றிய நபருக்கு 14 வருட சிறை!

Saturday, December 28, 2013
இலங்கை::இலங்கை வந்திருந்த ரஸ்ய பெண் பிரஜை ஒருவரை திருமணம் செய்வதாகக் கூறி 35600 அமெரிக்க டொலர் பணமோசடியில் ஈடுபட்ட நபர் ஒருவருக்கு 14 வருட சிறைத்தண்டனை மற்றும் 60,000 ரூபா தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளது.
 
இந்தச் சம்பவம் பேருவளை பிரதேசத்தில் கடந்த 2011ஆம் ஆண்டு இடம்பெற்றுள்ளது.
 
அளுத்கம பிரதேசத்தைச் சேர்ந்த லக்மால் அபேகுணவர்தன என்பவருக்கே இந்த தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
 
இந்நபர் குறித்த பெண்ணின் பெயரில் படகு ஒன்றை வாங்கி வியாபாரம் ஆரம்பிப்பதாக கூறி பண மோசடி செய்துள்ளார்.
 
களுத்துறை மேல் நீதிமன்ற நீதிபதி ஸகமபல் திலகரண்ட இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

No comments:

Post a Comment