Wednesday, December 04, 2013
பாக்தாத்::ஈரானில் ஷியா, சன்னி முஸ்லிம் பிரிவினர் இடையே அடிக்கடி மோதல் சம்பவம் நடந்து வருகிறது. பாக்தாத்தில் வட, தென் பகுதியில் கடந்த ஒருமாதமாக தொடர்ந்து வன்முறை நடந்து வருகிறது. இதில் ஏராளமானோர் பலியாகி உள்ளனர்.
பாக்தாத்தில் நேற்று ஒரே நாளில் பல்வேறு இடங்களில் மனித குண்டு, கார் குண்டு வெடிப்பு, துப்பாக்கி சூடு உள்ளிட்ட சம்பவம் நடந்தது. தர்மியா நகர் பகுதியில் உள்ள நகராட்சி அலுவலகம் அருகே குண்டு வெடித்ததில் 2 பேர் பலியானார்கள். ஷியா பிரிவினர் வசிக்கும் மேற்கு பாக்தாத் பயா என்ற இடத்தில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் 6 பேர் பலியானார்கள்.
5க்கும் மேற்பட்டோர் பலத்த காயம் அடைந்தனர். மற்றொரு இடத்தில் நடந்த தாக்குதலில் 14 பேர் கொல்லப்பட்டனர். பாதுகாப்பு பணியில் இருந்த 2 போலீசாரும் பலியாகி உள்ளனர். பல்வேறு சம்பவங்களில் நேற்று ஒரே நாளில் 24 பேர் பலியாகி உள்ளனர். ஈராக்கில் கடந்த ஓராண்டில் நடந்த வன்முறை சம்பவத்தில் இதுவரை 6200 பேர் பலியாகி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment