Wednesday, December 04, 2013
சிட்னி::ஆஸ்திரேலியாவில் முதலைகளை கண்காணிக்க வைத்திருந்த கேமராவை கழுகு ஒன்று தூக்கி சென்று 110 கி.மீ. தூரத்தில் வீசியுள்ளது. கேமரா செயல் பாட்டில் இருந்ததால் கழுகு பறந்த 110 கிமீ தூரமும் அதில் பதிவாகி இருக்கிறது.
ஆஸ்திரேலியாவில் வன பாதுகாவலர்கள் மே என்ற பகுதியில் மார்க்கரெட் ஆற்று பகுதியில் முதலைகளை கணக்கிடுவதற்காக சென்சார் பொருத்தப் பட்ட கேமராவை வைத்திருந்தனர். இந்த கேமரா 10 முதல் 15 செமீ நீளமும், 5 செமீ அகலமும் கொண்டது. இது நீரில் விழுந்தாலும் பாதிக்காமல் இயங்க கூடியது. சில தினங்களுக்கு முன்பு இங்கு வைக்கப்பட்டிருந்த கேமரா மாயமானது. இதையடுத்து வனத்துறை அதிகாரிகள் அந்த பகுதியில் கேமராவை தேடும் பணியில் ஈடுபட்டனர்.
சுமார் 110 கிமீ தொலைவில் ஆஸ்திரேலியாவின் வனப் பகுதிக்குள் மேரி ஆற்றின் அருகே அந்த கேமரா கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.அந்த கேமராவில் பதிவாகி இருந்த காட்சிகளை ஆய்வு செய்து பார்த்த போது கழுகு ஒன்று கேமராவை தூக்கி செல்வது பதிவாகி இருந்தது. இதுகுறித்து வனத்துறை அதிகாரி ரோனெய்ல் ஸ்கீன் கூறுகையில், கேமரா திருடு போனது குறித்து ஆய்வு நடத்தினோம். அதன்பின் 110 கிமீ தொலைவில் மேரி ஆற்றின் அருகே கிடந்த கேமராவை கண்டுபிடித்தோம். அதில் பதிவாகி இருந்த காட்சிகளை பார்வையிட்ட போதுதான் கழுகு தூக்கி சென்றது தெரிந்தது என்று தெரிவித்தார்.மேலும், கேமராவை கழுகு தூக்கி கொண்டு 110 கி.மீ. தூரம் பறந்த போது, எல்லா காட்சிகளும் அதில் பதிவாகி இருந்ததை பார்த்து அதிகாரிகள் ஆச்சரியம் அடைந்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

No comments:
Post a Comment