Wednesday, December 4, 2013

புலிகளின் தலைவர் பிரபாகரன் சொந்தமான காணிகள் உட்பட எந்த சொத்துக்களையும் அரசுடமையாக்க இடமளிக்க போவதில்லை: சிவாஜிலிங்கம்!

Wednesday, December 04, 2013
இலங்கை::புலிகளின் தலைவர்  பிரபாகரன் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு சொந்தமான காணிகள் உட்பட எந்த சொத்துக்களையும் அரசுடமையாக்க இடமளிக்க போவதில்லை என தமிழ்த் தேசியக் புலிகூட்டமைப்பின் வட மாகாண சபை உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.
 
முடிந்தால் புலிகளின் தலைவரது வீட்டையும் சொத்துக்களையும் அரசுடமையாக்கி காட்டட்டும் என்றும் அவர் சவால் விடுத்துள்ளார்.
 
புலிகளின் தலைவர் பிரபாகரனின் வீட்டையோ சொத்துக்களையோ சுவீகரிக்க இடமளிக்க போவதில்லை. முடிந்தால் அரசாங்கம் சுவீகரித்து காட்டட்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
புலிகளின் தலைவர்  பிரபாகரனின் வல்வெட்டித்துறை வீட்டை அரசுடமையாக்க போவதாக அரசாங்கம் அறிவித்திருந்தது.
இது குறித்து கருத்து வெளியிடும் போதே சிவாஜிலிங்கம் இதனை கூறியுள்ளார்.

No comments:

Post a Comment