Friday, November 01, 2013
புதுடெல்லி::இலங்கையின் வட மாகாண முதலமைச்சர் சீ.வீ.விக்னேஸ்வரனின் கடிதம் கிடைக்கப் பெற்றதாக இந்திய வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் சயிட் அக்பாருடின் தெரிவித்துள்ளார்.
கடந்த ஒக்ரோபர் மாதம் 28ம் திகதி மாலை கடிதம் கிடைக்கப்பெற்றது. கடிதத்தின் உள்ளடக்கம் பற்றிய விபரங்களை வெளியிட முடியாது. வடக்கில் மாகாணசபை தேர்தல் நடாத்தியமைக்கு விக்னேஸ்வரன் கடிதத்தில் நன்றி தெரிவித்திருந்தார்.
யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்யுமாறு அழைப்பு விடுத்துள்ளார்.
இந்த அழைப்பு கடிதம் மற்றும் ஏனைய பிற காரணிகளின் அடிப்படையில் அரசாங்கம் அடுத்த கட்ட நடவடிக்கைகளை எடுக்கும் என வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் சயிட் அக்பாருடின் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment