Friday, November 1, 2013

இந்திய கடல் எல்லைக்குள் பிரவேசிப்பதை தவிர்க்குமாறு கடற்றொழில் அமைச்சர் ராஜித்த சேனாரத்ன இலங்கை மீனவர் சமூகத்திடம் வேண்டுகோள்!

Friday, November 01, 2013
இலங்கை::இந்திய கடல் எல்லைக்குள் பிரவேசிப்பதை தவிர்க்குமாறு கடற்றொழில் அமைச்சர் ராஜித்த சேனாரத்ன இலங்கை மீனவர் சமூகத்திடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
 
ஏற்கனவே இலங்கை மீனவர்கள் 87 பேர் இந்திய சிறைகளில் இருப்பதாக அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
 
இவர்களில் 75 மீனவர்கள் தமிழகத்திலும் ஏனைய 12 மீனவர்கள் ஆந்திராவிலும் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
இலங்கை மீனவர்களின் 16 படகுகளையும் இந்திய பாதுகாப்பு தரப்பினர் கைப்பற்றியுள்ளனர்.
 
இதேவேளை, இந்திய கடற்பரப்பினுள் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த குற்றச்சாட்டின் பேரில் இலங்கை மீனவர்கள் 24 பேர் அந்த நாட்டு கரையோரப் பாதுகாப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
 
கன்னியாகுமரியில் இருந்து 90 கடல் மைல் தூரத்தில் தூத்துக்குடி கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபட்டிருந்த இலங்கை மீனவர்களை நேற்று இந்திய கரையோரப் பாதுகாப்புப் பிரிவினர் கைது செய்துள்ளதாக தி ஹிந்து தெரிவித்துள்ளது.
 
அத்துடன் இலங்கை மீனவர்களின் 4 மீன்பிடி படகுகளும் இந்திய கரையோரப் பாதுகாப்புப் பிரிவினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
 
இந்த மீனவர்களால் பிடிக்கப்பட்ட மீன்கள் மற்றும் அவர்களின் வலைகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக இந்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.
 
இதனிடையே, மியன்மார் கடல் பரப்பிற்குள் அத்துமீறி விரவேசித்த இலங்கை மீனவர்கள் 12 பேர் அந்த நாட்டு பாதுகாப்பு தரப்பினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
 
இவர்களது இரண்டு படகுகளையும் மியன்மார் அதிகாரிகள் கைப்பற்றியுள்ளதாக கடற்றொழில் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
குறித்த மீனவர்களை விடுவிப்பது தொடர்பில் தூதரக அதிகாரிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக திணைக்களத்தின் பணிப்பாளர் என்.டி.ஹெட்டிஆரச்சி கூறியுள்ளார்.
 
tamil matrimony_INNER_468x60.gif
 

No comments:

Post a Comment