Friday, November 01, 2013
மெல்பேர்ன்::கொழும்பின் பொதுநலவாய நாடுகள் கூட்டத்தை கனடாவை பின்பற்றி தாம் புறக்கணிக்கப்போவதில்லை என்று இந்தியாவும் அவுஸ்திரெலியாவும் அறிவித்துள்ளன
மெல்பேர்ன்::கொழும்பின் பொதுநலவாய நாடுகள் கூட்டத்தை கனடாவை பின்பற்றி தாம் புறக்கணிக்கப்போவதில்லை என்று இந்தியாவும் அவுஸ்திரெலியாவும் அறிவித்துள்ளன
இந்திய வெளியுறவு அமைச்சர் சல்மான் குர்ஸித், தற்போது அவுஸ்திரேலிய பயணத்தை மேற்கொண்டுள்ளார்
இந்தநிலையில் அவரும் அவுஸ்திரேலிய வெளியுறவு அமைச்சர் ஜூலியா பிஸப்பும் நேற்று செய்தியாளர் சந்திப்பு ஒன்றை நடத்தினர்
இதன்போது பொதுநலவாய நாடுகளை பொறுத்தவரை, அந்த நாடுகள் இலங்கையுடன் இணைந்து செயல்பட்டு அந்த நாட்டை ஊக்குவிக்கவேண்டும் என்று ஜூலியா குறிப்பிட்டார்
இது தொடர்பில் கனடாவுக்கும் செய்தியை அனுப்பியுள்ளதாக ஜூலியா தெரிவித்தார் எனினும் கனடா தமது தனித்தீர்மானத்தை எடுத்துள்ளதாக ஜூலியா தெரிவித்தார்
சந்திப்பில் உரையாற்றிய இந்திய வெளியுறவு அமைச்சர் சல்மான் குர்ஸித் தாம் கொழும்பு மாநாட்டில் பங்கேற்கப்போவதாக குறிப்பிட்டார்
எனினும் இந்திய பிரதமரின் பங்கேற்பு குறித்து இன்னும் உறுதிசெய்யப்படவில்லை என்று குர்ஸித் தெரிவித்தார்.
No comments:
Post a Comment