Friday, November 01, 2013
மதுரை::காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா சார்பில் யாரும் பங்கேற்கக்கூடாது என
மத்திய அரசுக்கு உத்தரவிடக்கோரி, மதுரை ஐகோர்ட் கிளையில் மனு தாக்கல்
செய்யப்பட்டது.
வக்கீல் ராய்ஸ் இமானுவேல் தாக்கல் செய்த மனு: இலங்கையில் நவம்பரில்
காமன்வெல்த் மாநாடு நடக்க உள்ளது. இந்தியா சார்பில் பிரதிநிதிகள் யாரும்
பங்கேற்கக்கூடாது என தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இது
ஒட்டுமொத்த தமிழர்களின் உணர்வுகளை பிரதிபலிக்கும் வகையில் உள்ளது. இதே போல், இலங்கை
போரில் மனித உரிமை மீறல் தொடர்பாக, அந்நாட்டிற்கு எதிராக வாக்களிக்க வேண்டும்
எனவும், இலங்கையை நட்பு நாடாக கருதக்கூடாது எனவும் சட்டசபையில், அரசு தீர்மானம்
நிறைவேற்றியது.
கேரளா மீனவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்திய இத்தாலி கடற்படை
கப்பல் வழக்கு, கச்சத்தீவை தமிழகம் திரும்பப்பெறும் வழக்குகளை சுப்ரீம் கோர்ட்,
ஐகோர்ட் விசாரித்துள்ளன. இவை வெளியுறவுக்கொள்கை சம்பந்தப்பட்டவைதான்.
பிரச்னைகளுக்கு தீர்வு காணும் இடம்தான் கோர்ட். காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா
சார்பில் யாரும் பங்கேற்கக்கூடாது என வலியுறுத்தி, மத்திய அரசுக்கு மனு
அனுப்பினேன். நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார். மனு,
விரைவில் விசாரணைக்கு வருகிறது.
No comments:
Post a Comment