Friday, November 1, 2013

குடிவரவு- குடியகல்வு சட்டத்தை மீறிச் செயற்பட்டதாலேயே சர்வதேச ஊடக ஒன்றிய உறுப்பினர்கள் இருவர் கைது: கெஹெலிய ரம்புக்வெல்ல!

Friday, November 01, 2013
இலங்கை::குடிவரவு- குடியகல்வு சட்டத்தை மீறிச் செயற்பட்டதாலேயே சர்வதேச ஊடக ஒன்றிய உறுப்பினர்கள் இருவர் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்படுகின்றனர். இவர்களுக்கு எதிராக சாதாரண சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.
 
இலங்கையில் நடைபெறும் பொதுநலவாய மாநாட்டில் செய்தி திரட்ட வரும் சர்வதேச ஊடகவியலாளர்களை அச்சுறுத்துவதற்காக இவ்வாறு நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று கூறிய அவர், சுற்றுலா வீஸாவில் நாட்டிற்குள் வந்து வேறு நடவடிக்கைகளில் ஈடுபட இடமளிக்க முடியாது எள்றார்.இரு சர்வதேச ஊடக ஒன்றிய உறுப் பினர்கள் கைது செய்யப்பட்டு விசாரிக் கப்படுவது குறித்து வினவப்பட்டதற்கு பதிலளித்த அவர், குடிவரவு சட்டத்தை மீறியது தொடர்பில் குடிவரவு, குடியகல்வு திணைக்களமே நடவடிக்கை எடுத்துள்ளது.
 
சுற்றுலா வீஸாவில் வந்து இங்கு விரிவுரை நடத்தவோ கருத்தரங்கு நடத்தவோ முடியாது. தகவல்களை மறைத்தே அவர்கள் இங்கு வந்துள்ளனர்.இவர்கள் தொடர்பான விடயத்தை முக்கியமான ஒன்றாக கருதவில்லை. இது சாதாரணமாக நடப்பதே.இந்த விடயத்துக்கும் பொதுநலவாய மாநாட்டிற்கும் எதுவித தொடர்பும் கிடையாது.ஊடகங்களுக்கு மாநாடு நடத்துவதானால் ஊடக அடையாள அட்டை இருக்க வேண்டும் என்றார்.
tamil matrimony_INNER_468x60.gif

No comments:

Post a Comment