Thursday, November 28, 2013

கிழக்கு மாகாணத்தில் தேசிய ஆளடையாள அட்டையில்லாதவர்களுக்கு அவற்றைப் பெற்றுக் கொடுக்கும் நோக்கில் இடம்பெயர் சேவை!

Thursday, November 28, 2013
இலங்கை::கிழக்கு மாகாணத்தில் தேசிய ஆளடையாள அட்டையில்லாதவர்களுக்கு அவற்றைப் பெற்றுக் கொடுக்கும் நோக்கில் இடம்பெயர் சேவை மட்டக்களப்பு மாவட்டத்தில் பிரதேச செயலகம் தோறும் இடம்பெற்று வருகின்றது.
 
அதனடிப்படையில் ஓட்டமாவடி கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் பிரிவிற்கான நடமாடும் சேவை பிரதேச செயலகத்தில் செவ்வாய்கிழமை இடம்பெற்றது.

ஓட்டமாவடி கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் திருமதி.நிஹாரா மஜீத், உதவித் திட்டப் பணிப்பாளர் எச்.எம்.எம்.றுவைத், ஆட்பதிவுத் திணைக்கள அதிகாரிகள், கிராம சேவை அலுவலகர்கள், வாழைச்சேனை பொலிஸார் மற்றும் கபே நிறுவனத்தின் உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.

மனித உரிமைகள் ஆய்வு நிலையம் மற்றும் கபே நிறுவனம் என்பன ஆளடையாள அட்டையில்லாதவர்களுக்கு அவற்றைப் பெற்றுக் கொடுக்கும் இடம்பெயர் சேவைக்கு நிதி அனுசரணை வழங்குகின்றன.

புகைப்படப் பிடிப்பு சேவையும், முத்திரைக் கட்டணங்களும் மேற்படி நிறுவங்களினால் இலவசமாக வழங்கப்படுகின்றது.

காலை எட்டு மணி தொடக்கம் மாலை ஐந்து மணி வரை இடம்பெற்ற இந்த நடமாடும் சேவையில் ஓட்டமாவடி கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலகப் பிரிவில் உள்ள ஒன்பது கிராம சேவகர் பிரிவைச் சேர்ந்த ஆளடையாள அட்டை பழுந்தடைந்த மற்றும் காணாமல் போன 531 விண்ணப்பதாரிகள் தங்களது விண்ணப்பங்களை சமர்ப்பித்துள்ளதாக கபே நிறுவனத்தின் மாகாண இணைப்பாளர் ஏ.எச்.ஏ.ஹுஸைன் தெரிவித்தார்.

No comments:

Post a Comment