Thursday, October 31, 2013
இலங்கை::கொழும்பு ஐந்து நட்சத்திர ஹோட்டலொன்றில் தங்கியிருந்த கொரிய பிரஜையொருவரின் 9 இலட்ச ரூபா திருடப்பட்டது தொடர்பாக கொம்பனித் தெரு பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
கொரிய பிரஜையுடன் ஹோட்டல் அறையிலிருந்த இனந்தெரியாத பெண்ணொருவர் இப்பணத்தை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இந்த கொரியப் பிரஜை கடந்த 2 ஆம் திகதி டி.ஆர். விஜயவர்தன மாவத்தையிலுள்ள கெசினோ சூதாட்ட விடுதிக்குச் சென்று 6,600 அமெரிக்க டெலர்களை சூதாட்டத்தில் வென்றதாகவும் விடுதியிலிருந்து ஹோட்டலுக்கு வாகனமொன்றில் சென்ற போது வாகன சாரதி மூலம் அறிமுகமான இந்தப் பெண்ணை ஹோட்டலுக்கு அழைத்துச் சென்றதாகவும் கூறப்படுகிறது.
கொரியப் பிரஜை இந்தப் பெண்ணுடன் இரவைக் கழித்ததாகவும் மறுதினம் காலை எழுந்து பார்த்தபோது பெண் அறையில் இல்லாததால் அறையை சோதனையிட்டபோது முதல் நாள் கெசினோவில் வெற்றிபெற்ற, 6,600 அமெரிக்க டொலர்கள் உட்பட அவரிடமிருந்த 33,000 ரூபா இலங்கைப் பணமும் காணாமற் போனதை அறிந்து கொம்பனித் தெரு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
ஹோட்டலில் பொருத்தப்பட்டிருந்த பாதுகாப்பு கெமராவை பரீட்சித்ததில் இப்பெண் அடையாளம் காணப்பட்டதாக கூறப்படுகிறது. கொம்பனித்தெரு பொலிஸார் இப்பெண்ணைக் கைது செய்ய நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
No comments:
Post a Comment