Thursday, October 31, 2013
இலங்கை::துரிதமாக கடிதங்களை கிடைக்கச் செய்வதற்காக அதிவிரைவு தபால் சேவை நாடளபவிய ரீதியில் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
அதனடிப்படையில் வவுனியாவிலும் 29ம் திகதி முதல் உத்தியோக பூர்வமாக அதி விரைவு தபால் சேவை ஆரம்பிக்கப்பட்டது.
இது தொடர்பில் பிரதேச அஞ்சல் அதிபதி நாயகம் என்.ரட்ணசிங்கம் கருத்து தெரிவிக்கையில்..
எமது திணைக்களத்தின் மற்றுமோர் முயற்சியாக தபால்களை உடனடியாக கிடைக்கச் செல்லக் கூடியதாக எமது அமைச்சரின் நடவடிக்கை காரணமாக அதிவிரைவு தபால் சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
எமக்கு இரண்டு வாகனங்கள் இந் நடவடிக்கைக்காக வழங்கப்பட்டுள்ளது. அதில் ஒன்று யாழ்பாணம் செல்லும். இது வடமாகாண தபால்களை விநியோகிக்கும். மற்றையது தம்புள்ளைக்கு சென்று தபால்களை ஒப்படைக்கும்.
தென் பகுதிக்குரிய தபால்களை தம்புள்ளை பகுதியில் வைத்து சேகரிப்பதனால் அங்கு சென்று எமது வாகனம் விநியோகிக்கும் என்றார். இதன் மூலம் தபால் விநியோகத்தில் ஏற்படும் தடங்கல்களை குறைக்க முடியும் எனவும் தெரிவித்தார்.
நேற்று முன்தினம் முதல் ஆரம்பிக்கப்பட்ட இந்த சேவையில் பிரதேச அஞ்சல் அதிபதி நாயகம் என்.ரட்ணசிங்கம், பிரதேச அஞ்சல் அத்தியட்சகர் எம.ஜி.அல்ஹா சல்ஹாது, மற்றும் வவுனியா அஞ்சல் திணைக்கள உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.

No comments:
Post a Comment