Wednesday, October 30, 2013

சகல இலங்கைத் தமிழர்களும் ஆபத்துக்களை எதிர்நோக்கவில்லை: பிரித்தானிய குடிவரவு அமைச்சர் மார்க் ஹார்பர்!

Wednesday, October 30, 2013
லண்டன்::சகல இலங்கைத் தமிழர்களும் ஆபத்துக்களை எதிர்நோக்கவில்லை என பிரித்தானியா அறிவித்துள்ளது.

புகலிடக் கோரிக்கையாளர் தொடர்பிலான புதிய வகையீட்டு அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

புகலிடக் கோரி;க்கை விண்ணப்பங்கள் தனிப்பட்ட அடிப்படையில் கவனத்தில் எடுக்கப்பட்டு வருவதாக பிரித்தானிய குடிவரவு அமைச்சர் மார்க் ஹார்பர் தெரிவித்துள்ளார்.

சகல இலங்கைத் தமிழர்களும் ஆபத்துக்களை எதிர்நோக்கவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த ஜனவரி முதல் ஜூன் மாதம் வரையில் 347 இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர்கள் நாடு கடத்தப்பட்டுள்ளனர்.

பலவந்தமான அடிப்படையிலும் சுய விருப்பின் அடிப்படையிலும் நாடு கடத்தப்பட்டுள்ளனர்.

உள்துறை அமைச்சும், நீதிமன்றமும் புகலிடக் கோரிக்கையாளரை நாடு கடத்துவது பொருத்தமானது எனக் கருதினால் மட்டுமே நாடு கடத்தல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.

tamil matrimony_INNER_468x60.gif

No comments:

Post a Comment