Wednesday, October 30, 2013

பொதுநலவாய மாநாடு தொடர்பான செய்திகளை சேகரிக்க பிரித்தானியாவின் புலிகள் ஆதரவு சனல்- 4 தொலைக்காட்சி நிறுவனத்திற்கு, இலங்கை அரசாங்கம் அனுமதி!!!

Wednesday, October 30, 2013
இலங்கை::பொதுநலவாய மாநாடு தொடர்பான செய்திகளை சேகரிக்க பிரித்தானியாவின் புலிகள் ஆதரவு சனல்- 4 தொலைக்காட்சி நிறுவனத்திற்கு, இலங்கை அரசாங்கம் அனுமதி வழங்கி யுள்ளது.
 
 புலிகள் ஆதரவு சனல் -4 தொலைக்காட்சி, இலங்கை அர சாங்கத்திற்கு எதிராக போர்க்குற்றங்களை சுமத்தி இரண்டு விவரணப் படங்களை தயாரித்து ஒளிபரப்பியிருந்தது. இந்த நிலையில் இலங்கை அரசாங்கத்திற்கும் தொலைக்காட்சி நிறுவனத்திற்கும் இடை யில் முரண்பாடுகள் நிலவின.
 
அத்துடன் இலங்கை இராணுவம் 70 ஆயிரம் தமிழர்களை படுகொலை செய்திருப்பதால் பொதுநலவாய நாடுகளின் மாநாட்டை புறக்கணிக்க வேண்டும் என சனல்- 4 தொலைக்காட்சியின் பணிப்பாளர் கெல்லம் மெக்ரே பல நாடுகளிடம் கோரிக்கை விடுத்திருந்தார்.
 
இந்த கோரிக்கையை முன்வைத்து அவர் 11 நாடுகளில் போர் தவிர்ப்பு வலயம் திரைப்படத்தை அவர் திரையிட்டிருந்தார்.
 
அதேவேளை புலிகள் ஆதரவு சனல்- 4 தொலைக்காட்சியின் ஜோனத்தன் மில்லர், அண்மையில் சுற்றுலாப் பயணி போல் இலங்கை வந்து, வவுனியாவுக்கு சென்று தகவல்களை பெற்றுச் சென்றுள்ளமை தெரியவந்துள்ளது என  பத்திரிகை தெரிவித்துள்ளது.
tamil matrimony_INNER_468x60.gif

No comments:

Post a Comment