Wednesday, October 30, 2013

வடக்கு கிழக்கை மீண்டும் இணைக்கும் தேவை முஸ்லிம் மக்களுக்கு இல்லை: மொஹமட் முஸமில்!

Wednesday, October 30, 2013
இலங்கை::வடக்கு கிழக்கை மீண்டும் இணைக்கும் தேவை முஸ்லிம் மக்களுக்கு இல்லை என்று முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பு” தெரிவித்துள்ளது.

கொழும்பில் நேற்று  இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அந்த அமைப்பின் இணைப்பாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான மொஹமட் முஸமில் இதனை குறிப்பிட்டார்.

வடக்கு மாகாண முதலமைச்சர் சீ வி விக்னேஸ்வரன், வடக்கு கிழக்கு இணைப்பு தொடர்பில் வெளியிட்ட கருத்து தொடர்பிலேயே மொஹமட் முஸமில் இவ்வாறு குறிப்பிட்டார்.

வடக்கு கிழக்கு இணைப்பு தொடர்பில் தற்போது வெகுவாக பேசப்பட்டு வருகின்றது. கிழக்கு மாகாண சபையில் யோசனையும் நிறைவேற்றப்படுகிறது.

எனினும் மக்கள் வடக்கு கிழக்கு இணைப்பை கோரவில்லை.

ஒன்றாக இணைந்து வாழவே அவர்கள் விரும்புகின்றனர். இதேவேளை வேலுப்பிள்ளை பிரபாகரன், கெப்பிட்டிப்பெலவைப் போன்றவர் என்று விக்னேஸ்வரன் குறிப்பிட்டிருந்தார். எனினும் கெப்பிட்டிப்பொல நாட்டிற்கு துரோகம் செய்த வெளிநாட்டவர்களால் கொல்லப்பட்டார் என்றும் முஸமில் குறிப்பிட்டார்.
tamil matrimony_INNER_468x60.gif

No comments:

Post a Comment