Wednesday, October 2, 2013

வட மாகாணத்திற்கென்று ஒரு ஜனாதிபதியை உருவாக்கவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முயற்சிக்கின்றது: விமல் வீரவன்ச!

Wednesday, October 02, 2013
இலங்கை::வட மாகாணத்திற்கென்று ஒரு ஜனாதிபதியை உருவாக்கவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முயற்சிக்கின்றது. கூட்டமைப்பின் வெற்றிக்கும், பிரிவினை கொள்கைக்கும் பின்புலத்தில் சர்வதேசங்களும், நவநீதம்பிள்ளையுமே செயற்பட்டுள்ளனர் என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

மேலும் அன்று புலிகளின் ஆயுத்தின் உதவியோடு சம்பந்தன் பேரம் பேசினார். இன்று நவிபிள்ளையின் உதவியுடன் பிரிவினை வாதத்திற்கு பேரம் பேசி வருகின்றார். நவநீதம்பிள்ளையின் வருகைக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வெற்றிக்கும் நெருங்கிய தொடர்புள்ளது எனவும் அவர் குறிப்பிட்டார்.

சௌசிறிபாயவில் நேற்று இடம்பெற்ற வைபவமொன்றின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்...

No comments:

Post a Comment