Wednesday, October 2, 2013

இலங்கை கடற்பரப்பில் கைதுசெய்யப்பட்ட இந்திய மீனவர்கள் இந்திய கரையோரப் பாதுகாப்பு அதிகாரிகளிடம் ஒப்படைப்பு!

Wednesday, October 02, 2013
இலங்கை::இலங்கை கடற்பரப்பில் கைதுசெய்யப்பட்டு பின்னர், விடுதலை செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் 66 பேரும் இந்திய கரையோரப் பாதுகாப்பு அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.
 
தலைமன்னாருக்கு அருகில் உள்ள கடற்பரப்பில் வைத்து இன்று காலை 10 மணியளவில் இவர்கள் இந்திய கடற்படையினரிடம் ஒப்படைக்கப்பட்டதாக கடற்படையின் ஊடகப் பேச்சாளர் கொமாண்டர் கோசல வர்ணகுலசூரிய குறிப்பிட்டுள்ளார்.
 
இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி பிரவேசித்து மீன்பிடியில் ஈடுபட்டமைக்காக  கடற்படையினரால் கைதுசெய்யப்பட்ட இந்திய மீனவர்கள் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தனர்...
 
 இந்திய கடற்படையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள இராமேஸ்ர மீனவர்களும் இன்று இரவுக்கு முன்னர் அவர்களது சொந்த ஊர்களுக்கு திரும்ப ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
குறித்த மீனவர்கள் இலங்கை கடல் எல்லையை தாண்டிய குற்றத்திற்காக கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் கடந்த 25ஆம் திகதி மன்னார் நீதிமன்றத்தினால் விடுதலை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது

No comments:

Post a Comment