Wednesday, October 02, 2013
இலங்கை::அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்ளும் நோக்கில் அவசர சட்டமூலம் ஒன்றை கொண்டுவருவதற்கான ஜனநாயக கதவு மூடப்படவில்லை. தேவைப்படின் இதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கான சாத்தியம் உள்ளது என்று அரசாங்கம் தெரிவித்துள்ளது.
எனினும் தற்போதைய சூழலில் பாராளுமன்றத் தெரிவுக்குழுவின் ஊடாகவே அரசியலமைப்பு திருத்தங்களை செய்வதற்கான முயற்சிகளை முன்னெடுத்துள்ளோம் என்றும் அரசாங்கம் குறிப்பிட்டுள்ளது.
13 ஆவது திருத்தச் சட்டத்தில் திருத்தங்களை கொண்டுவரவேண்டும் என்பது தொடர்பில் முன்வைக்கப்படும் விடயங்கள் குறித்து தகவல் வெளியிட்ட ஊடகத்துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல மேற்கண்டவாறு கூறினார்.
அமைச்சர் இந்த விடயம் குறித்து மேலும் குறிப்பிடுகையில்,
எனினும் ஒரு விடயத்தை தெளிவாக அனைவரும் புரிந்துகொள்ளவேண்டும். அதாவது அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்ளும் நோக்கில் அவசர சட்டமூலம் ஒன்றை கொண்டுவருவதற்கான ஜனநாயக கதவு மூடப்படவில்லை.
தேவைப்படின் இதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கான இயலுமை உள்ளது. ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கமானது மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்துடன் செயற்பட்டுவரும் அரசாங்கமாகும்.
எனவே, 13 ஆவது திருத்தச் சட்டத்தில் திருத்தம் ஒன்றை மேற்கொள்ள வேண்டிய தேவை ஏற்படின் அதனை எம்மால் செய்ய முடியும். அதற்கான ஜனநாயக கதவு மூடப்படவில்லை என்பதனை தெளிவாக குறிப்பிடவேண்டும். மக்களுக்கு அவ்வாறான தேவை ஏற்பட்டால் அதனை நாங்கள் செய்வோம்.
அதாவது எந்தவொரு சட்டத்திலும் திருத்தம் ஒன்றை கொண்டுவருவதற்கு ஜன நாயக ரீதியான உரிமையும் இயலுமையும் அரசாங்கத்துக்கு உள்ளது என்பதனை புரிந்து கொள்ளவேண்டும் என்றார்...

No comments:
Post a Comment