Wednesday, October 2, 2013

ஐக்கிய நாடுகள் சபையின் 68வது பொதுச் சபையின் ஆறாவது சட்டக் குழுவிற்கு இலங்கை தெரிவு செய்யப்பட்டுள்ளது!

Wednesday, October 02, 2013
இலங்கை::ஐக்கிய நாடுகளின் பொதுச்சபையின் 6வது குழுவான சட்டக்குழுவின் தலைவராக இலங்கையின் ஐக்கிய நாடுகளுக்கான வதிவிடப்பிரதிநிதி பாலித கோஹன தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.
நடைபெற்றுக்கொண்டிருக்கும் பொதுச்சபையின் 68வது அமர்வின்போதே அவர் இந்த பதவிக்கு தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.
அவர், ஆசியா மற்றும் பசுபிக் குழுவினரால் இந்த நிலைக்கு பரிந்துரைக்கப்பட்டார்.
இந்தநிலையில் பாலித கோஹன பொதுச்சபையின் 6வது குழுவுக்கு தெரிவுசெய்யப்பட்ட முதலாவது இலஙகையர் என்ற பெருமையை பெறுகிறார்.

ஐக்கிய நாடுகள் சபையின் 68வது பொதுச் சபையின் ஆறாவது சட்டக் குழுவிற்கு இலங்கை தெரிவு செய்யப்பட்டுள்ளது.

நியூயோர்க்கில் நேற்று அந்த குழுக் கூடிய போது ஐ.நாவுக்கான இலங்கையின் நிரந்தரவதிவிடப் பிரதிநிதி பாலித கோஹன குழுவுக்கு தெரிவு செய்யப்பட்டார்.

பொதுச் சபைக் கூட்டத்தில் முன்வைக்கப்படும் சட்டரீதியான கேள்விகள் குறித்து ஆராய்வதற்காக இந்த ஆறாவது சட்டக் குழு ஏற்படுத்தப்பட்டது.

ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையில் உறுப்பு நாடுகள் அங்கம் வகிக்கும் குழுக்களில் இந்த சட்டக்குழுவானது முக்கியமான குழுவாகும்.

ஐ.நாவின் ஆறாவது சட்டக் குழுவிற்கு தெரிவு செய்யப்பட்ட முதல் இலங்கையின் பிரதிநிதி பாலித கோஹன ஆவார்.

1958 ஆம் ஆண்டு அன்றைய இலங்கையின் பிரதிநிதி சேர் க்ளேட் சி கொரோயா ஐ.நாவின் 5வது குழுவான வரவு செலவு குழுவில் இடம்பெற்றதுடன் 1960 ஆம் ஆண்டு முதல் குழுவான ஆயுத ஒழிப்பு குழுவிலும் இடம்பெற்றிருந்தார்.

இதனையடுத்து 33 வருடங்களின் பின்னர் ஸ்டென்லி கல்ப்பகே 1993 ஆம் ஆண்டு 4வது குழுவான காலனித்துவத்திற்கு எதிரான குழுவில் அங்கம் வகித்தார்.

20 வருடங்களுக்கு பின்னர் தற்போது ஐ.நா சட்டக்குழுவிற்கு இலங்கையின் பி
ரதிநிதி ஒருவர் தெரிவு செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment