Wednesday, October 02, 2013
இலங்கை::இலங்கையில் பாராளுமன்ற ஜனநாயகம் தழைத்தோங்கி வருகிறது. எங்கள் நாட்டில் சட்டத்திற்கும், ஒழுங்கிற்கும் முதலிடம் அளிக்கப்படுகிறது. சர்வதேசத்தின் அழுத்தங்க ளுக்கு அஞ்சி நாம் சட்டங்களை மாற்ற முடியாது. எமது நாட் டின் உச்சநீதிமன்ற தீர்ப்புகளையோ, சட்டங்களையோ மாற்ற முடியாது என்று ஊடக, தகவல்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். சி.வி. விக்னேஸ்வரன் உச்ச நீதி மன்றத்தின் நீதியரசராக இருந்தவர். அவருக்கு சட்டம் நன்கு தெரியும். ஆயினும் இப்போது விக்னேஸ்வரன் சட்டத்திற்கு முரணான வேண்டுகோள்களை விடுத்து, எங்கள் நாட்டு சட்டத்தை சவாலுக்கு உட்படுத்தும் நகைச்சுவை நடிகராக மாறி விடலாகாது என்றும் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல கூறியுள்ளார்.
பொலிஸ், காணி அதிகாரங்கள் மாகாணசபைக்கு வழங்கப்படா விட்டால் சர்வதேசத்தின் உதவியை நாடுவோம் என்று சி.வி. விக்னேஸ்வரன் விடுத்த கருத்து குறித்து அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல அபிப்பிராயம் தெரிவிக்கையில், இலங்கை இறையாண்மையும், சுயாதீனமும் கொண்ட சுதந்திர நாடாகும். எமக்கென அரசியல் அமைப்பு, நீதித்துறை, சட்டங்கள் என அரச இயந்திரம் செயற்படுகின்றது. இவற்றின் மீது அழுத்தங்க ளையும், பலாத்காரத்தையும் பிரயோகிக்கும் அதிகாரம் சர்வ தேச நாடுகளுக்கு கிடையாது. நாம் சட்டங்களுக்கு அமை யவே எமது தீர்மானங்களை எடுப்போம் என்று கூறினார்.
தமிழ்த் தேசியக்கூட்டமைப்பினர் எதற்கெடுத்தாலும் இந்தியாவுக்கோ அல்லது மேற்கத்திய நாடுகளுக்கோ சென்று முறைப் பாடு செய்து எமது நாட்டின் உள்ளூர் பிரச்சினைகளை சர்வ தேச மயப்படுத்துவது தவறான செயலாகும். கடந்த 30 முதல் 35 வருடங்களாக எங்கள் நாட்டின் தமிழ் அரசியல்வாதிகள் இலங்கை அரசாங்கத்துடனோ, இலங்கையில் உள்ள சிங்கள கட்சிகளினதோ கோரிக்கைகளை முன்வைத்து விட்டுக் கொடுக்கும் மனப்பான்மையுடன் சமரச பேச்சுவார்த்தைகளை நடத் தத் தவறியுள்ளனர்.
இதுவே எங்கள் நாட்டின் இனப்பிரச்சினையும், தமிழர் பிரச்சினையும் முடிவில்லாத தொடர்கதையாக தொடர்ந்து கொண்டிருப் பதற்கான பிரதான காரணமாகும். கடந்த சுமார் 35 ஆண்டுக ளாக எங்கள் நாட்டின் தமிழ்த் தலைவர்கள் வெளிநாடுகளுக்கு சென்று தங்கள் பிரச்சினையை தீர்த்து வைப்பதற்கு வெளி நாடுகளின் உதவியை பெறுவதற்கு எடுத்த முயற்சிகள் வெற்றி கண்டனவா? அனைத்துமே தோல்வியில் தான் முடிவடைந் தன. 1983ம் ஆண்டு ஜுலை இனக்கலவரத்தின் பின்னர் அன்றைய இந் தியப் பிரதம மந்திரி இந்திராகாந்தி ஆபத்பாந்தவரைப் போன்று நடித்து, இனக்கலவரத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழ் நாட்டில் அடைக்கலம் கொடுத்ததுடன், தனது தலையீட்டை நிறுத்திக் கொண்டிருக்க வேண்டும். ஆனால், அதற்கு பதில் இந்திரா காந்தி தமிழ் இளைஞர்களுக்கு தமிழ்நாட்டில் விசேட முகாம்களை அமைத்து இராணுவப் பயிற்சி அளித்தார். இந்த இராணுவப் பயிற்சி எமது நாட்டு இளைஞர்களுக்கோ, நம் நாட்டு தமிழ் மக்களுக்கோ பிரச்சினையை தீர்த்துக் கொள்வத ற்கு உதவியாக அமைந்ததா? இல்லை. இதனால் தான் பயங்கர வாதம் இலங்கையில் விஸ்வரூபம் எடுத்து நம்நாட்டு தமிழர், சிங்களவர், முஸ்லிம் மக்களின் ஆயிரக்கணக்கானோரின் உயி ர்களை பறித்தது.
அதன் பின்னர் மீண்டும் நாம் பூஜ்ஜிய நிலை க்கே திரும்பியுள்ளோம். கடந்த கால அனுபவத்தைப் பயன்படுத்தி தமிழ் மக்கள் முரண் பாடு அரசியலை நடத்துவதற்கு பதில் இணக்கப்பாட்டு அரசி யலை நடத்தி, தங்கள் உரிமைகளை வென்றெடுத்து மீண்டும் ஐக்கிய இலங்கையில் இன, மத, பேதமின்றி எல்லோரும் நிம் மதியாக வாழ்வதற்கு வழியமைத்துக் கொள்வது அவசியமா கும். அமைச்சர்களான வாசுதேவ நாணயக்கார, டாக்டர் ராஜித சேனார த்ன போன்ற சமதர்மவாதத்தில் நம்பிக்கையுடையவர்கள் எந்த வொரு இனத்திற்கும் அல்லது சமூகத்திற்கும் அல்லது மதத்தி ற்கும் தீங்கிழைக்காத வகையில் அனைவரும் இலங்கைப் பிர ஜைகள் என்ற முறையில் சமத்துவமான உரிமைகளை பெற வேண்டுமென்ற நிலைப்பாட்டில் இருக்கிறார்கள்.தமிழ்த் தேசியக்கூட்டமைப்பினர் இவ்விதம் நடுநிலையில் சிந்தி த்து கருமமாற்றும் அமைச்சர்களுடன் கூடுதலான தொடர்பை வைத்து அவர்களினூடாக பெரும்பான்மை சமூகத்திற்கு தங் கள் அபிலாஷைகளை எடுத்துரைத்தால் இனப்பிரச்சினைக்கு சுமுகமாக தீர்வு காண்பதற்கான வழி நிச்சயம் கிடைக்கும்.
இதனடிப்படையில் வடமாகாண சபையின் நிர்வாக பொறுப்பை ஏற்றுக் கொண்டுள்ள அதன் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வர னும் அவரது மாகாணசபை உறுப்பினர்களும் யதார்த்தமாக சிந் தித்து செயற்பட்டால் வடபகுதியில் தொடர்ந்தும் அமைதி நிலை நாட்டப்படுவதுடன் அபிவிருத்தி பணிகளை முன்னர் இருந்த தைப் போன்று சிறப்பாக நிறைவேற்ற முடியும். எனவே, விக் னேஸ்வரனும் அவரது மாகாணசபை உறுப்பினர்களும் தமிழ் மக்களுக்கு எது நன்மையை ஏற்படுத்தும் என்பதை புரிந்து கொண்டு அதற்கமைய செயற்படுவது அவசியம்.

No comments:
Post a Comment