Wednesday, October 2, 2013

இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள, ராமேஸ்வரம் மீனவர்கள் 5 பேரை, நவ.,21 வரை நீடித்து, கொழும்பு கோர்ட் உத்தரவிட்டது!

Wednesday, October 02, 2013
ராமேஸ்வரம்::இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள, ராமேஸ்வரம் மீனவர்கள் 5 பேரை, நவ.,21 வரை நீடித்து, கொழும்பு கோர்ட் உத்தரவிட்டது. ராமேஸ்வரத்தில் இருந்து 28.11.11 ல், கடலுக்கு சென்ற மீனவர்கள் எமர்சன், வில்சன், அகஸ்டஸ், பிரசாந், லாங்லெட் ஆகியோரை, போதை பொருள் கடத்தியதாக, இலங்கை கடற்படையினர் கைது செய்து, யாழ்ப்பாணம் சிறையில் அடைத்தனர்.

இவ்வழக்கு, கடந்தாண்டு கொழும்பு ஐகோர்ட்டிற்கு மாற்றப்பட்டது. வெலிக்கடை சிறையில், இருந்த மீனவர்கள், கொழும்பு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களது காவலை நவ.,21 வரை, நீடித்து கோர்ட் உத்தரவிட்டது. இந்நிலையில், ஜூலை 30 ல் கைதான நாகை மீனவர்கள் 31 பேரை, பருத்தித்துறை கோர்ட் விடுவித்தது. இவர்களும், செப்.,23 ல், விடுதலையான பாம்பன் மீனவர்கள் 35 பேரும், இன்று மண்டபம் கடலோர காவல் நிலையத்திற்கு அழைத்து வரப்படுவர்,என ராமேஸ்வரம் மீனவர் சங்க தலைவர் யூ.அருளானந்தம் தெரிவித்தார்.

No comments:

Post a Comment