Wednesday, October 02, 2013
இலங்கை::552ஆம் படையணியின் 55வது படைப்பிரிவிற்குட்பட்ட இராணுவ அதிகாரிகள் மற்றும் படைவீர்ர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்ட தமிழ் மொழிப் பயிற்சியின் நான்காவது கட்டப் பயிற்சிகளை நிறைவு செய்தவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் வைபவம் அன்மையில் இடம்பெற்றது.
55ஆவது படைப்பிரிவுத் தலைமையகத்தில் மூன்று மாத காலமாக நடைபெற்ற நான்காவது தமிழ் மொழிப் பயிற்சியில் 23 இராணுவத்தினர் பயிற்சிகளை நிறைவு செய்தனர். அத்துடன் மூன்றாவது கட்டப் பயிற்சியின் போது மூன்று அதிகாரிகளும் 49 படை வீரர்களும் கலந்து கொண்டனர்.
தாம் கடமையாற்றும் பிரதேசங்களில் பொது மக்களுடன் சிறந்த தொடர்பாடலை மேற்கொள்வதற்காக படையினரின் தமிழ்மொழித் திறனை மேம்படுத்தும் முகமாக ஆரம்பிக்கப்பட்ட இத்திட்டம் இராணுவத்தினருக்கும் பொது மக்களுக்குமிடையே நல்லுறவை மேம்படுத்திக்கொள்ள பாலமாக அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்க அம்சமாகும்.

No comments:
Post a Comment