Wednesday, October 30, 2013
தூத்துக்குடி::தூத்துக்குடி அருகே இந்திய எல்லைக்குள் நுழைந்த அமெரிக்க தனியார் கப்பல் ஒன்று சில தினங்களுக்கு முன் பிடிபட்டது. அந்த கப்பலில் முறையான ஆவணங்கள் இல்லாமல் ஆயுதங்கள் வைத்து இருந்ததாக 35 பேர் கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில் 12 இந்தியர்கள் உள்பட 35 பேருக்கும் ஜாமீன் வழங்க கோரி தூத்துக்குடி மாவட்ட முதன்மை கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி 30–ந் தேதிக்கு ஒத்திவைத்தார். அதன்படி இன்று (புதன்கிழமை) வழக்கு மீண்டும் விசாரணைக்கு வருகிறது.
அதே நேரத்தில் அமெரிக்க கப்பலுக்கு டீசல் விற்பனை செய்ததாக கைது செய்யப்பட்ட 5 பேரின் ஜாமீன் மனு நேற்று தூத்துக்குடி முதலாவது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி சி.கதிரவன், செல்வம், முருகேஷ் ஆகிய 2 பேருக்கும் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். மரிய அண்டன் விஜய் ஜாமீன் மனு மீது இன்றும் விசாரணை நடக்கிறது.
No comments:
Post a Comment