Wednesday, October 30, 2013

சென்னையில் அமைந்துள்ள இலங்கை பிரதி உயர்ஸ்தானிகராலய அலுவலகம், மஹாபோதி சங்கம், இலங்கை வங்கி ஆகியவற்றின் மீது பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளன!

Wednesday, October 30, 2013
சென்னை::சென்னையில் அமைந்துள்ள இலங்கை  பிரதி உயர்ஸ்தானிகராலய அலுவலகம், மஹாபோதி சங்கம், இலங்கை வங்கி ஆகியவற்றின் மீது பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளன.

இரண்டு இந்தியத் தபால் நிலையங்கள் நேற்று செவ்வாய்க்கிழமை தாக்குதலுக்கு உள்ளானமையைத் தொடர்ந்து மேற்படி பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

குறிப்பாக இலங்கையுடன் தொடர்புடைய முக்கிய நிறுவனங்களில் பாதுகாப்புப் படையினர் நிறுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கொழும்பில் எதிர்வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாட்டில் இந்தியா பங்குபற்றுவதை எதிர்க்கின்ற புலிகள் ஆதரவு தமிழ் அமைப்பு ஒன்று இந்தத் தாக்குதலை மேற்கொண்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
 
இந்நிலையில் இந்த சம்பவத்தை தொடர்ந்து சென்னையில் உள்ள இலங்கை தூதரக அலுவலகம் மற்றும் இலங்கை அலுவலகங்களுக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

மேலும் எழும்பூரில் உள்ள புத்த மத கோயிலுக்கும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. அத்துடன் மத்திய அரசு அலுவலகங்களுக்கும் பாதுகாப்பை அதிகரித்து கண்காணிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.      

tamil matrimony_INNER_468x60.gif

No comments:

Post a Comment