Wednesday, October 30, 2013

வலி. வடக்கு விவகாரம் உள்நாட்டு பிரச்சினை என்பதால் கருத்து கூற முடியாது: இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் மிச்சல் ஜே. சிசன்!

Wednesday, October 30, 2013
இலங்கை::வலி. வடக்கு பிரச்சனை தொடர்பாக அமெரிக்கா தூதுவருடன் கதைத்து பயனில்லை. அது அரசாங்கத்துடன் தான் கதைக்க வேண்டும் என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

யாழ். கோவில் வீதியில் உள்ள முதலமைச்சரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இன்று காலை 9.30 மணியளவில் இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் மிச்சேல்ஜே.சிசனிற்கும் வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனிற்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

அதன் பின்னர் ஊடகவியலாருக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்:- 

அமெரிக்கா மக்களுக்கும் வடமாகாண மக்களுக்கும் இடையில் ஒரு நல்லுறவு பேணப்பட வேண்டும் என தூதுவர் விரும்புவதாக தெரிவித்தார்.

அவ்வேளை ஊடகவியலாளர்களால் வலி.வடக்கு தொடர்பான பிரச்சனைகள் கலந்துரையாடப்பட்டதா என கேட்ட போது,

வலி. வடக்கு பிரச்சனை ஓர் அரசியல் பிரச்சனை. அந்த பிரச்சனை தொடர்பாக இலங்கை அரசாங்கத்துடனேயே பேச வேண்டும். அது தொடர்பாக இவர்களுடன் பேசுவது பிரியோசனமற்றது.

ஆனாலும் அந்த பிரச்சனை தொடர்பாக தூதுவரிடம் கூறியுள்ளேன். அதேவேளை இப் பிரச்சனை தொடர்பாக நேற்று முன்தினம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனிடம் தெரிவித்துள்ளேன். அது தொடர்பாக சம்பந்தன் அரசாங்கத்துடன் பேசுவதாக என தெரிவித்தார்.

பொதுநலவாய மாநாட்டில் கலந்து கொள்ள உங்களுக்கு அழைப்பு வந்துள்ளதா என கேட்டபோது,

அது தொடர்பாக இதுவரை எனக்கு அழைப்பு வரவில்லை. ஊடகங்களில் தெரிவிக்கப்படுகின்றது. கலந்து கொள்வதற்கான அழைப்பு வந்தால் அது தொடர்பாக பின்னர் முடிவெடுக்கப்படும் என தெரிவித்தார்..

வலி. வடக்கு விவகாரம் உள்நாட்டு பிரச்சினை என்பதால் கருத்து கூற முடியாது என இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் மிச்சல் ஜே. சிசன் தெரிவித்தார்.

இந்த பிரச்சினை உள்நாட்டு அரசாங்கத்தின் பிரச்சினையாகும். இது தொடர்பாக நான் எதுவித கருத்துக்களையும் கூறமுடியாது" என்றார். அங்கு தொடந்து கருத்து வெளியிட்ட அமெரிக்க தூதுவர்,

யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட 5,000 குடும்பங்களின் வாழ்வாதாரத்தினை மேம்படுத்துவதற்கு அமெரிக்காவினால் உதவிகள் மேற்கொள்ளப்படும். வட மாகாணத்தில் வாழும் மக்களின் பிரச்சினைகள் தொடர்பாக அமெரிக்க மக்கள் அவதானித்துக் கொண்டிருக்கின்றார்கள்.

அத்துடன், வட மாகாணத்தில் முதன்முறையாக முதலமைச்சர் தெரிவுசெய்யப்பட்டமை சந்தோசமளிக்கின்றது. வட பகுதியில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களிற்கான உதவிகளினை அமெரிக்க அரசாங்கம்  வழங்கும்" என்றார்.
tamil matrimony_INNER_468x60.gif

No comments:

Post a Comment