Thursday, October 31, 2013
இலங்கை::காவியுடையணித்த பிக்குகளால் பெண்கள் மீது பிரயோகிக்கப்படும் வன்முறைகள் தொடர்பில் விசாரணை மேற்கொள்ள விசேட காவல்துறை பிரிவொன்றை அமைக்குமாறு புத்தசாசன அமைச்சின் செயலாளர் காவல்துறை மா அதிபரிடம் கோரியிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கு காவல்துறை மா அதிபரும் இணக்கப்பாட்டை வெளியிட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இது தொடர்பில் இன்று பொது பல சேனா அமைப்பு மற்றும் புத்தசாசன மற்றும் ஆன்மீக விவகார அமைச்சின் செயலாளர்களுக்கு இடையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது..
புத்த சாசன அமைச்சின் செயலாளரினால் பத்திரிகைகளுக்கு வழங்கப்பட்ட தகவல் தொடர்பில் அறிந்து கொள்வதற்கோ பொது பல சேனா குறித்த அமைச்சின் செயலகத்திற்கு சென்றது.
இது தவிர புத்த சாசன அமைச்சினால் புத்த சாசனத்தை பாதுகாப்பதற்கான போதுமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வில்லை என்றும் அந்த அமைப்பு குற்றம் சுமத்தியுள்ளது.
இதனிடையே, பொது பல சேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர், புத்த சாசன அமைப்புக்குள் நுழைய முற்பட்ட போது, அவர்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையே தீவிர நிலை ஏற்பட்டது.
புத்தசாசன அமைச்சின் செயலாளர் எம்.கே.பி.திசாநாயக்க குறித்த இடத்திற்கு சென்று குறித்த பிக்குகளை கலந்துரையாடலுக்கு அழைத்துச் சென்றார்..

மதமாற்ற தடைச்சட்டத்தை உடனடியாக பாராளுமன்றத்தில் நிறைவேற்றுமாறும், புத்தசாசன அமைச்சரை மாற்றுமாறும் பொது பல சேனா அமைப்பு வலியுறுத்தியுள்ளது. இன்று காலை கொழும்பிலுள்ள புத்தசாசன அமைச்சுக்கு முன்னால் கூடிய பொது பல சேனா அமைப்பின் ஆதரவாளர்கள் தமது கோரிக்கையை வலியுறுத்தினர்.
அதன்போது பொதுபலசேனாவின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் உள்ளிட்ட சிலர் அதிகாரிகளிடம் மனுவொன்றையும் கையளித்துள்ளனர்.
இலங்கையில் கிறிஸ்தவ, முஸ்லிம் அடிப்படைவாத சக்திகள், பெளத்தர்கள், இந்துக்களை பலாத்காரமாக மதமாற்றம் செய்யும் பணியில் ஈடுபட்டு வருவதாக கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவிக்கின்றார்.
அதனால் உடனடியாக மதமாற்ற தடைச்சட்டத்தை பாராளுமன்றத்தில் நிறைவேற்ற வேண்டும் என்ற பிரதான கோரிக்கையை முன்வைப்பதாக அவர் கூறினார்.

No comments:
Post a Comment