Thursday, October 31, 2013

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் இன்று முற்பகல் அமைச்சரவைக் கூட்டம்: வடமாகாண முதலமைச்சர் விக்கினேஸ்வரன் தவிர்ந்த ஏனைய மாகாணங்களின் முதலமைச்சர்கள் இந்த கூட்டத்தில் பங்கேற்றிருந்தனர்.

Thursday, October 31, 2013
இலங்கை::ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் இன்று முற்பகல் அமைச்சரவைக் கூட்டம் இடம்பெற்றது.

இந்த கூட்டத்தில் அமைச்சரவை உறுப்பினர்களுடன் மாகாண முதலமைச்சர்களும் இணைந்திருந்தனர்.

வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் தவிர்ந்த ஏனைய மாகாணங்களின் முதலமைச்சர்கள் இந்த கூட்டத்தில் பங்கேற்றிருந்தனர்.

வடமாகாண முதலமைச்சர் மருத்துவ பரிசோதனைகளின் பொருட்டு நேற்றைய தினம் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அவர் தொடர்ந்தும் இன்று பிற்பகல் வரை மருத்துவ பரிசோதனைகளை பெற்றுக்கொள்வார் என்று மருத்துவமனைப் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

இதனிடையே இன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் போது, மூலோபாய அபிவிருத்தி சட்டமூலத்தின் கீழ் ரத்து செய்யப்பட்ட வர்த்தமானி அறிவித்தலுக்கு பதிலாக புதிய வர்த்தமானி அறிவித்தல் முன்வைக்கப்படவில்லை.

எவ்வாறாயினும், கெசினோ தவிர்ந்த விருந்தக கட்டிடம் அமைப்பதற்கு வரி சலுகை வழங்குவதற்காக வர்த்தமானி அறிவித்தல் எதிர்காலத்தில் அமைச்சரவை அனுமதிக்காக வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதலீட்டு விரிவாக்கல் அமைச்சர் செயலாளர் எம்.எம்.சி. பேர்டினான்ட் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.
 
tamil matrimony_INNER_468x60.gif

No comments:

Post a Comment