Wednesday, October 30, 2013

நாட்டின் பாதுகாப்பு கருதியே வடக்கு மாகாணத்தில் இராணுவம் நிறுத்தப்பட்டுள்ளது: ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ!


Wednesday, October 30, 2013
இலங்கை::::பயங்கரவாதம் ஏற்படக் காரணமான விடயங்களை நீக்கும் நோக்கிலேயே வடக்கு கிழக்கு உள்ளிட்ட பகுதிகளில் அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுத்துச் செல்வதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
 
ஸ்ரீமத் ஜோன் கொத்தலாவல பல்கலைகழகத்தின் 23வது பட்டமளிப்பு விழாவில் நேற்று கலந்துகொண்டு உரையாற்றியபோதே ஜனாதிபதி இந்த கருத்தினை வெளியிட்டுள்ளார்.
 
தமது பெறுமதிமிகு இளம் காலத்தையும், சிறுபராயத்தையும் அன்று பயங்கரவாத செயற்பாடுகளுக்காக தலைமை வகித்தவர்கள் இன்று பிரிவினைவாத்தை கைவிட்டு ஜனநாயக நீரோட்டத்தில் இணைந்துள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
 
யுத்தம் இடம்பெற்ற காலத்தில் வெளிநாடுகளில் இருந்தவர்களும், கொழும்பில் இருந்தவர்களும் ஜனநாயகத்திற்கு இடம் கிடைத்ததும் பிரிவினைவாதத்தை அணைத்துக்கொள்வதை காண்பதாகவும் அவர்  குறிப்பிட்டுள்ளார்.
 
இன்று பிரிவினைவாதத்தை தோற்கடிக்க, புதிய பிரவேசங்களை பயன்படுத்துவதாகவும், தேசிய பாதுகாப்பு கருதி அது தொடர்பில் செயற்படும் உரிமை முப்படையினருக்கும் உள்ளதாகவும் ஜனாதிபதி மேலும் குறிப்பிட்டுள்ளார்..
 
நாட்டின் பாதுகாப்பு கருதியே வடக்கு மாகாணத்தில் இராணுவம் நிறுத்தப்பட்டுள்ளது: ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ!
 
வடக்கு மாகாண தேர்தலில் வெற்றி பெற்று முதலமைச்சராக பொறுப்பேற்றிருக்கும் விக்னேஸ்வரனும் வடக்கு மாகாணத்தில் இருந்து இராணுவம் வெளியேற வேண்டும் என்று கூறிவருகிறார்.
 
நாட்டின் பாதுகாப்பு கருதியே வடக்கு மாகாணத்தில் இராணுவம் நிறுத்தப்பட்டுள்ளது. இது நடைமுறைக்கு சாத்தியமற்றது. இதை செய்யவும் முடியாது என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சே தெரிவித்துள்ளார்.
 
பாதுகாப்பு பல்கலைக்கழக முகாமைத்துவ சபைத் தலைவரும் பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் செயலாளருமான கோத்தாபய ராஜபக்ஷவும் இந்த வைபவத்தில் கலந்துகொண்டார்.

பாதுகாப்புத் துறை பல்வேறு பிரிவுகளில் பட்டம் பெற்றவர்களுக்கு சான்றிதழ்களும் விருதுகளும் வழங்கப்பட்டன.

சகல துறைகளிலும் திறமை காட்டிய பாதுகாப்பு அதிகாரிக்கு ஜனாதிபதி விருதுகள் வழங்கி பாராட்டுத் தெரிவித்தார்.

tamil matrimony_INNER_468x60.gif

No comments:

Post a Comment