Wednesday, October 2, 2013

வட மாகாணசபைக்கு உரிய அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டும்: ஈ.பி.டி.பி.: ஸ்ரீரங்கேஸ்வரன்!

Wednesday, October 02, 2013
இலங்கை::இன,மதவாத சக்திகளின் கோரிக்கைகளுக்கு செவி மடுக்காது அரசாங்கம் வட மாகாணசபைக்கு உரிய அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டுமென ஈ.பி.டிபி. கட்சியின் வடமராட்சி அமைப்பாளரும், பருத்தித்துறையின் பிரதேச சபைத் தலைவர் ஏ.ஸ்ரீரங்கேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
அரசாங்கம் உரிய அதிகாரங்களை வழங்காவிட்டால் வடக்கு மக்கள் போராட்டங்களை நடாத்துவார்கள் என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
பல்வேறு தியாகங்கள் மற்றும் இழப்புக்களுக்கு மத்தியில் வட மாகாணசபை கிடைக்கப் பெற்றுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
தெற்கு இனவாத சக்திகள் இன மதவாத பிரச்சாரங்களில் ஈடுப்பட்டு தங்களது அரசியல் இருப்பினை உறுதி செய்து கொள்ள முயற்சித்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
மாகாணசபைகளுக்கு முழுமையான அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.
இதேவேளை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வட மாகாணசபைத் தேர்தலின் போது அளித்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட வேண்டியது அவசியமானது என அவர் தெரிவித்துள்ளார்.
கூட்டமைப்பின் இலக்கினை எய்துவதற்கு பூரண ஒத்துழைப்பு வழங்கப்படும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தாங்கள் ஏமாற்றப்பட்டமையை வடக்கு மக்கள் உணர்ந்து கொள்ளும் வரையில் காத்திருக்கப் போவதாகத் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment