Tuesday, October 1, 2013

ஜெய்க்கா திட்டத்தின் நிதியுதவியின் கீழ் சேவாலங்கா மன்றத்தின் அனுசரணையுடன் திருகோணமலையில் தொழி்பயிற்சி நிலையம் திறப்பு!

Tuesday, October 01, 2013
இலங்கை::ஜெய்க்கா திட்டத்தின் நிதியுதவியின் கீழ் சேவாலங்கா மன்றத்தின் அனுசரணையுடன் இலங்கை தொழில் பயிற்சி திணைக்களத்தின் திருகோணமலை உப்பு வெளியில் அமைந்துள்ள வளாத்தினுள் நிர்மாணிக்கப் பட்ட தொழில் பயிற்சி நிலையம் நேற்று (30.09.2013) கிழக்கு மாகாண விவிசாய கைத்தொழில் கால்நடை மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் ஹாபீஸ் நஸீர் அஹமட்டினால் உத்தியோக பூர்வமாகத் திறந்து வைக்கபட்டது.
 
 9 மாத காலம் மேசன், ஓடாவி  போன்ற பயிற்சிகளை நிறைவு செய்து கொண்ட 40 மாணவர்களால் இக்கட்டிடம் நிர்மாணிக்கப் படட்டதாக மேற்படி கிழக்கு மாகாண அமைச்சின் ஊடகப் பிரிவு தெரிவிக்கின்றது.
 
சேவாலங்கா மன்றத்தின் திட்ட ஒருங்கிணைப்பாளர் டி.கே.பி.ஜி.ஜெயந்த பண்டார அவர்களின் தலைமையில் நடைபெற்ற இக்கட்டிட திறப்பு விழாவில் ஜெய்க்கா திட்டத்தின் இலங்கை நாட்டுக்கான பிரதிநிதி கிரேட்டோ தனாக்க , கிழக்கு மாகாண பிரதம செயலாளர் எம்.டி.கே.எஸ்.அபயகுணவர்த்தன சிறுகைத் தொழில் திணைக்கள மாகாணப் பணிப்பானர் லக்ஸமன் தென்னக்கோன், அமைச்சின் செயலார் கே.பத்மநாதன் ஆகியோர் உட்பட தொழில் பயிற்சி மாணவர்கள் ஆசிரியர்கள், என பலர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.
 
இதன்போது கருத்து தெரிவித்த மேற்படி அமைச்சர்.
40 தொழிற் பயிற்சி மாணவர்களைக் கொண்டு நிர்மாணிக்கபட்ட இந்த தொழிற் பயிற்சி கட்டிடம் மிக மிக வரவேற்கத் தக்கதாகும் இச்செயற்பாடானது இன்னும் மேன்மேலும் 4000 இற்கும் மேற்பட்ட தொழிற்பயிற்சியாளர்களை உருவாக்க வேண்டும்.
 
இந்தச் செயற்பாடானது கிழக்கு மாகாணத்தில் பரவலாக விஷ்தரிக்கப் படவேண்டும் இதற்கு எனது அமைச்சு எப்போதும் உறுதுணையாக இருப்பதோடு சகல உதவிகளையும் நல்கும் என கிழக்கு மாகாண விவிசாய கைத்தொழில் கால்நடை மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் ஹாபீஸ் நஸீர் அஹமட் இதன்போது தெரிவித்தார் என்பதும் குறிப்பிடத் தக்கதாகும்.

No comments:

Post a Comment