Wednesday, October 02, 2013
சென்னை::தேசபிதா மகாத்மா காந்தியடிகளின் பிறந்த நாளையொட்டி சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அவரது உருவச் சிலைக்கு தமிழக கவர்னர் ரோசய்யா, தமிழக முதல்வர் ஜெயலலிதா ஆகியோர இன்று மலர் தூவி மரியாதை செலுத்துகிறார்கள்..
காந்தியடிகளின் _வது பிறந்த நாளையொட்டி சென்னை மெரினா கடற்கரையில் உள்ள காந்தி சிலை மலர்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.
இன்று தமிழக கவர்னர் ரோசய்யா, முதலமைச்சர் ஜெயலலிதா ஆகியோர் கடற்கரையில் உள்ள காந்தி சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்துகிறார்கள்.
காந்தியடிகளின் பிறந்தநாளையொட்டி தீண்டாமை ஒழிப்பு மற்றும் தேசிய ஒருமைப்பாட்டை வலியுறுத்தி பேரணி காந்திசிலை அருகில் இருந்து புறப்படுகிறது. அமைச்சர் ராஜேந்திர பாலாஜி இந்த பேரணியை துவக்கி வைக்கிறார்.
இன்று மாலை காந்தி மண்டபத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் தமிழக கவர்னர் ரோசய்யா பங்கேற்கிறார். தீண்டாமை மற்றும் தேசிய ஒருமைப்பாடு தொடர்பான பேச்சுப்போட்டி, கட்டுரைப்போட்டி ஆகியவற்றில் வெற்றி பெற்றவர்களுக்கு அவர் பரிசுகளை வழங்குகிறார். உயர்கல்வித்துறை அமைச்சர் பழனியப்பன் மற்றும் பலர் நிகழ்ச்சியில் பங்கேற்கின்றனர். தேசிய ஒருமைப்பாடை வலியுறுத்தும் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெறும்.
No comments:
Post a Comment