Wednesday, October 2, 2013

யார் முன்னிலையினில் பதவியேற்பு! இதுவரை முடிவில்லை என்கிறார் (புலி)கூட்டமைப்பின் விக்கினேஸ்வரன்!!

Wednesday, October 02, 2013
இலங்கை::வடமாகாணசபைக்கான (புலி)கூட்டமைப்பின் முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் அங்கத்தவர்கள் யார் முன்னிலையினில் பதவியேற்பதென்ற விடயம் இதுவரை முடிவாகவில்லையென முதலமைச்சர் சீ.வி.விக்கினேஸ்வரன் ஊடகவியலாளர்களிடம் தெரிவித்தார்.
 
நேற்று ஆளுநர் சந்திரசிறியினை சந்தித்து தனது நியமனக்கடிதத்தினை பெற்ற பின்னர் ஊடகவியலாளர்களிடையே பேசுகையினிலேயே அவர் இத்தகவலை வெளியிட்டார்.
இதனிடையே  ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச  முன்னிலையிலோ அல்லது வடமாகாண ஆளுநர் ஜி.ஏ.சந் திரசிறி முன்னிலையிலோ தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வடமாகாணசபை முதலமைச்சர் மற்றும் சபை உறுப்பினர்கள் பதவியேற்கமாட்டார்கள் என தெரியவருகின்றது.  
 
யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளுக் கிடையிலான கலந்துரையாடலின் போதுஇ ஜனாதிபதி அல்லது ஆளுநர் முன்னிலையில் பதவியேற்பதா என்பது தொடர்பில் ஆராயப்பட்டது.

இதற்கு பங்காளிக் கட்சித் தலை வர்கள் விருப்பம் தெரிவிக்கவில்லை என கூட்டமைப்பு வட்டாரங்களிலிருந்து அறியமுடிகிறது.   இதனையடுத்தே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்களின் பதவிப் பிரமாண நிகழ்வை ஜனாதிபதி முன்னிலையிலோ அல்லது ஆளுநர் முன்னிலையிலோ நடத்தாதிருக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது என்றும் தெரியவருகின்றது.

No comments:

Post a Comment