Wednesday, October 02, 2013
இலங்கை::ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் நவிபிள்ளை தனது இலங்கைக்கான விஜயத்தையடுத்து, கடந்த வாரம் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடரில் வாய்மூல அறிக்கையை வெளியிட்ட போது பல நாடுகளின் விமர்சனங்களுக்கு மத்தியில் இலங்கைக்கு அதிக ஆதரவு கிடத்துள்ளது.
மேற்படி தொடரில் நாடுகளுக்கிடையே பல்வேறு விமர்சனங்கள் இருந்தபோதும் வெனிசுலா,பெலாரஸ்,கியுபா போன்ற நாடுகள் உட்பட சுமார் 20க்கும் மேற்பட்ட நாடுகள் தமது ஆதரவை இலங்கைக்கு வழங்கியமை குறிப்பிடத்தக்கதாகும். இலங்கைக்கு தமது ஆதரவை வழங்கிய நாடுகள் தமது பல்வேறு கருத்துக்களையும் இலங்கைக்குச் சார்பாக முன்வைத்தன.
ரஸ்ய பிரதிநிதி கருத்துத் தெரிவிக்கையில் கடந்த நான்கு ஆண்டுகளாக இலங்கையில் குண்டு வெடிப்புக்களோ இறப்புக்களோ இல்லை, மேலும் இலங்கை அரசு மக்களின் அபிவிருத்திப் பணியில் அக்கறையுடன் செயற்படுவதை சுட்டிக்காட்டினார்.
வடபகுதியில் இடம் பெற்ற தேர்தலில் தமிழர்கள் வெற்றி பெற்மையானது,தீவிரவாதம் தோற்கடிக்கப் பட்டமையின் வெளிப்பாடாகும் என அவர் மேலும் தெரிவித்தார்.
வெனிசுலா, நாட்டின் உள்விவகாரங்கில் தலையிடுவதை நிராகரித்த அதேவேளை அவுஸ்திரேலியா,தனிமைப்படுத்தாமையானது இலங்கையில் மனித உரிமைகள் விருத்தியடையச் செய்யக்கூடிய சிறந்த வழி எனக்குறிப்பிட்டது.
இலங்கையில் நல்லிணக்கத்தை மேம்படுத்தலும் பொறுப்புக்கூறலும் என்ற தலைப்பில் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையகப் பொதுச் செயலரினால் முன்வைக்கப்பட்ட வாய்மூல அறிக்கையில் மேற்படி நாடுகள் தமது ஆதரவை இலங்கைக்குவழங்கின.
ஐ.நாவுக்கான இலங்கையின் நிரந்தர வதிவிடப்பிரதி நிதி ரவிநாத் ஆரியசிங்க பதிலளிக்கும்போது இலங்கையின் உள்விவகாரங்களில் ஐ.நாவின் மனித உரிமைகள் ஆணையகச் செயலாளரின் மிகைப்படுத்தப்பட்ட கருத்தைச் சுட்டிக்காட்டினார்.
ஜப்பான்,நிவ்சிலாந்,நோர்வே,எகிப்து,மியன்மார்,பிரேசில்,தாய்லாந்,குவைத்,மற்றும் பிலிப்பைன்ஸ் போன்றன இலங்கையை ஆதரித்த ஏனைய நாடுகளாகும்.

No comments:
Post a Comment