Tuesday, October 01, 2013
இலங்கை::வடக்கில் இராணுவத்தின் எண்ணிக்கை குறைக்கப்பட வேண்டுமாம் (புலிகளின் எண்ணிக்கை உயர்த்த படவேண்டுமாம்) (புலிகூட்டமைப்பு இரா.சம்பந்தன் கோரிக்கை!
வடக்கில் இராணுவத்தின் எண்ணிக்கை குறைக்கப்பட வேண்டுமென தமிழ்த் தேசியக் (புலி)கூட்டமைப்பு கட்சி மீண்டும் கோரிக்கை விடுத்துள்ளது. வடக்கில் நிலைநிறுத்தப்பட்டுள்ள படைவீரர்களின் எண்ணிக்கை குறைக்கப்படுவதனையே தமிழ்த் தேசியக் (புலி)கூட்டமைப்பு விரும்புவதாக கட்சியின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
வடக்கில் அதிகளவில் இராணுவத்தினர் நிலைநிறுத்தப்பட்டுள்ளமை சிவில் நிர்வாக நடவடிக்கைகளுக்கு தொடர்ந்தும் இடையூறாக அமையும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இராணுவத்தினர் படை முகாம்களுக்கு வரையறுக்கப்பட வேண்டியது அவசியமானது என அவர் தெரிவித்துள்ளார்.
தேர்தல் வெற்றியின் பின்னர் இந்திய ஊடகமொன்றுக்கு அளித்த செவ்வியில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். கடந்த தேர்தல் காலத்தில் இராணுவத்தினர் பிரச்சார நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகவும், கூட்டமைப்பு வேட்பாளர் மீதான தாக்குதலை இராணுவத்தினரே நடத்தியிருக்க வேண்டுமென நம்புவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். வட மாகாண ஆளுனரான சிவிலியன் ஒருவரை (புலிகளை) நியமிக்க வேண்டியது அவசியமானது எனவும், இது குறித்து ஏற்கனவே ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment