இலங்கை::ஐக்கிய நாடுகள் அமைப்பின் பொதுச் செயலாளர் பான் கீ மூனும், இந்திய வெளிவிவகார அமைச்சர் சல்மான் குர்ஷித்தும் இலங்கை விவகாரம் குறித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். இலங்கையின் தற்போதைய நிலைமைகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.
நியூயோர்க்கில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் அமைப்பின் தலைமைக் காரியாலயத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது. பிராந்திய வலய நாடுகளில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த இந்தியாவின் பங்களிப்பு குறித்து பான் கீன் மூன் வலியுறுத்தியுள்ளார்.
இலங்கை, பங்களாதேஷ், மியன்மார், மாலைதீவு உள்ளிட்ட பிராந்திய வலய நாடுகளின் பிரச்சினைகள் குறித்து இந்திய வெளிவிவகார அமைச்சருடன், பான் கீ மூன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். ஐக்கிய நாடுகள் அமைப்பின் அமைதி காக்கும் பணிகளில் இந்தியா வழங்கி வரும் ஒத்துழைப்பு பாராட்டுக்குரியது என பான் கீ மூன் தெரிவித்துள்ளார்...
இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்கள் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் விரைவில் இலங்கைக்கான விஜயத்தை மேற்கொள்ளவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்திய மீனவர் சம்மேளனப் பிரதிநிதிகள் நேற்று இந்தியப் பிரதமர் அலுவலகத்தின் மத்திய இணை அமைச்சர் வி.நாராயணசாமியை சந்தித்தபோது இந்த விடயம் தெரிவிக்கப்பட்டதாக த ஹிந்து செய்தி வெளியிட்டுள்ளது.
இலங்கையில் கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்களை விரைவில் விடுவிப்பதற்கு தலையீடு செய்யுமாறு மீனவர் சங்கங்களின் பிரதிநிதிகள் இதன்போது கோரிக்கை விடுத்துள்ளனர்.
மீனவர்களை விடுவிப்பதுடன் அவர்களது படகுகளை பாதுகாப்பாக மீட்பதற்கும் மத்திய அரசாங்கம் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக மத்திய இணை அமைச்சர் வி.நாராயணசாமி சுட்டிக்காட்டியுள்ளார்
இதேவேளை, இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இந்திய மீனவர்கள் அனைவரையும் விடுவிப்பதற்கு மத்திய அரசாங்கம் இராஜதந்திர ரீதியில் அழுத்தம் பிரயோகிக்க வேண்டுமென தமிழக முதல்வர் ஜெயலலிதா ஜெயராம் வலியுறுத்தியுள்ளார்.
இந்தியப் பிரதமர் கலாநிதி மன்மோகன் சிங்கிற்கு நேற்று முன்தினம் அனுப்பிவைத்துள்ள கடிதத்தில், தமிழக முதல்வர் இந்த விடயத்தினை குறிப்பிட்டுள்ளார்.
இந்திய அரசாங்கம், ஏழ்மையான, பாதுகாப்பற்ற மீனவர்களின் நலன்களை கவனத்திற்கொள்ளாது, அவர்களை கைவிட்டுள்ளதாகவும் ஜெயலலிதா ஜெயராம் குற்றம் சுமத்தியுள்ளார்
எதிர்வரும் காலங்களில் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறுவதனை தடுப்பதற்கு இந்திய மத்திய அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் தமிழக முதல்வர் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் இதுவரையில் 136 இந்திய மீனவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களுக்குச் சொந்தமான 29 படகுகள் இலங்கையின் பொறுப்பில் உள்ளதாகவும் ஜெயலலிதா ஜெயராம் குறிப்பிட்டுள்ளதாக தி ஹிந்து செய்தி வெளியிட்டுள்ளது.
இதனிடையே, மன்னார் மாவட்ட நீதிமன்றத்தினால் விடுதலை செய்யப்பட்ட 41 மீனவர்களும் தமிழகத்தைச் சென்றடைந்துள்ளனர்.
இவர்கள் இராமேஸ்வரம் மற்றும் மண்டபம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

No comments:
Post a Comment