Tuesday, October 01, 2013
இலங்கை::சிறையில் அடைக்கப்பட்டு இருந்த நாகை மற்றும் காரைக்காலை சேர்ந்த மீனவர்கள் 31 பேரையும் திருகோணமலை நீதிமன்றம் இன்று விடுதலை செய்தது.
கடந்த ஜூலை மாதம் 30ந் திகதி நாகப்பட்டினம், காரைக்காலை சேர்ந்த 65 மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர். இவர்கள் கச்சத்தீவு அருகே மீன் பிடித்து கொண்டிருந்த போது இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டனர்.
இதனை தொடர்ந்து விடுதலை செய்யப்பட்ட 31 மீனவர்களும் ஓரிரு நாளில் இராமேசுவரம் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் 35 மீனவர்களையும் பாம்பனுக்கு அனுப்ப இலங்கை அரசு இன்று அனுமதி வழங்கியது.
அவர்கள் நாளை காலையில் இந்திய கடலோர காவல் படையினரிடம் ஒப்படைக்கப்படுகின்றனர். எனவே நாளை மாலை அவர்கள் இராமேசுவரம் வந்து சேருவார்கள்.

No comments:
Post a Comment