Tuesday, October 1, 2013

அரசியலமைப்பின் 13 ஆவது திருத்த சட்டத்தை பலப்படுத்துவது தொடர்பாக கிழக்கு மாகாண சபையில் பிரேரணை நிறைவேற்றம்!

Tuesday, October 01, 2013
இலங்கை::அரசியலமைப்பின் 13 ஆவது திருத்த சட்டத்தை பலப்படுத்துவது தொடர்பாக கிழக்கு மாகாண சபையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் குழுத் தலைவர் ஏ.எம்.ஜெமீல் சமர்ப்பித்த பிரேரணை நிறைவேற்றப்பட்டுள்ளது.
இந்த பிரேரணை சமர்பிக்கப்பட்ட போது ஏற்பட்ட அமளியின் பின் சபை நடவடிக்கை தொடர்ந்தது. இவ்விவாதம் சற்றுமுன் நிறைவுக்கு வந்ததுடன் பிரேரணை வாக்கெடுப்புக்கு விடப்பட்டது. 

 இதன்போது பிரேரணைக்கு ஆதரவாக 16 வாக்குகளும் எதிராக ஒரு வாக்கும் அளிக்கப்பட்டுள்ளது. முதலமைச்சர் நஜீப் அப்துல் மஜீத் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை.
தமிழ் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்களும் முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்களும் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்தனர். இவர்களுடன் மாகாண கல்வி மற்றும் காணி அமைச்சர் விமலவீர திசாநாயக்க, ஆளும் தரப்பு போனஸ் உறுப்பினர் நவரட்ணராஜா ஆகியோரும் ஆதரவாக வாக்களித்தனர்.
ஆளும் தரப்பு உறுப்பினர் பிரியந்த பத்திரன (திருகோணமலை) என்பவரே எதிர்த்து வாக்களித்த ஒரே ஒரு உறுப்பினராவார்.
அரசியலமைப்பின் 13 ஆவது திருத்த சட்டத்தை பலப்படுத்துவது தொடர்பான பிரேரணை சமர்ப்பிக்கப்பட்ட இன்றைய அமர்வில் அமைச்சர் அதாவுல்லா தலைமையிலான தேசிய காங்கிரஸ் உறுப்பினர்களும் அமைச்சர் றிசாத் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்களும் சபையில் பிரசன்னமாகி இருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment