Thursday, October 31, 2013
இலங்கை::வடக்கு மாகாணசபை தேர்தல் தொடர்பில் பொதுநலவாய நாடுகள் அமைப்பு தமது இறுதி அறிக்கையை வெளியிட்டுள்ளது
இந்த அறிக்கையில் பொதுநலவாய கண்காணிப்பாளர்கள், 7 பரிந்துரைகளை சமர்ப்பித்துள்ளனர்.
குறிப்பாக தேர்தல் பிரசார நடவடிக்கைகளின் போது ராணுவத்தின் பிரசன்னம் பாரதூரமான விடயம் என தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், அதுகுறித்து விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
எதிர்காலத்தில் இப்படியான நடவடிக்கைள் இடம்பெறாமல் இருப்பதனை உறுதிசெய்ய வேண்டும் என்றும் அந்த இறுதி அறிக்கையில் சுடடிக்காட்டப்பட்டுள்ளது.

இதுதவிர, உள்ளுர் தேர்தல் கண்காணிப்பாளர்கள் தாக்கப்பட்ட சம்பவங்கள் குறித்து விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இப்படியான சம்பவங்கள் ஜனநாயக விழுமியங்களை பாரிய அளவில் பாதிக்கும் விடயம் என பொதுநலவாய நாடுகள் அமைப்பின் இறுதி அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதேவேளை, பொதுநலவாய கண்காணிப்பு குழுவின் வடமாகாண சபைத் தேர்தல் தொடர்பான அறிக்கையை ஏற்றுக்கொண்டுள்ள அமைப்பின் செயலாளர் கமலேஷ் சர்மா தேர்தலுக்கு பின்னர், ஏற்பட்ட இயல்பு சூழ்நிலை குறித்து மகிழ்ச்சி வெளியிட்டுள்ளார்.
அத்துடன், கண்காணிப்புக்குழு இலங்கையில் சுயாதீன தேர்தல் ஆணைக்குழுவொன்றின் அவசியத்தையும் வலியுறுத்தியுள்ளதாக கமலேஷ் சர்மா குறிப்பிட்டுள்ளார்.
No comments:
Post a Comment