Thursday, October 31, 2013

இந்தியா வருகிறார் கோத்தபய ராஜபக்சே!

Thursday, October 31, 2013
புதுடெல்லி::இலங்கையின் வெளியுறவு துறை செயலர் கோத்தபய ராஜபக்சே இந்த வாரம் இந்தியாவுக்கு வரவிருப்பதாகவும், அவரது பயணம் தனிப்பட்ட முறையிலானது என்பதால் காமன்வெல்த் மாநாடு விவகாரம் மற்றும் மீனவர் பிரச்சினை குறித்து இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்த மாட்டார் என்று இலங்கை அரசு தெரிவித்துள்ளது. 
 
இந்தியா வரும் கோத்தபய ராஜபக்சேவிடம் மீனவர் பிரச்சினை குறித்து பேசப்படும் என்று  மத்திய இணை அமைச்சர் நாராயணசாமி கூறியிருந்தார். ஆனால் இதனை இலங்கை மறுத்துள்ளது. கோத்தபயாவின் இந்திய பயணம் குறித்த உண்மையான நோக்கம் தெரிவிக்கப்படவில்லை.
 
காமன்வெல்த் தலைவர்களின் மாநாட்டில் பங்கேற்கும் பிரிட்டன் பிரதமர் டேவிட் கேமரூன் யாழ்ப்பாணம் செல்லவிருப்பதை போல் இந்திய பிரதமர் மன்மோகன்சிங்கும் யாழ்ப்பாணத்திற்கு வருகை தர வேண்டும் என்று இலங்கை தரப்பில் வலியுறுத்தப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 
tamil matrimony_INNER_468x60.gif

No comments:

Post a Comment