Wednesday, October 30, 2013
வாஷிங்டன்::அமெரிக்காவில் உள்ள இந்தியர்கள் தீபாவளி கொண்டாட நாடாளுமன்றத்தில் முதல் முறையாக 2 எம்.பி.க்கள் தீர்மானம் கொண்டு வந்துள்ளனர்.
அமெரிக்காவில் ஆளும் கட்சி எம்.பி.க்கள் இரண்டு பேர் முதல் முறையாக தீபாவளி வாழ்த்து கூறி தீர்மானம் ஒன்று தாக்கல் செய்தனர். ஆளும் கட்சி எம்.பி.க்களான ஜோகிரவுலி, பீட்டர் புரோஸ்கான் ஆகியோர் அமெரிக்காவில் வசிக்கும் இந்தியர்களுக்கு மரியாதை செய்யும் வகையில் உலகம் முழுவதும் வசிக்கும் இந்தியர்கள் கொண்டாடும் தீபாவளிக்கு வாழ்த்து தெரிவித்து
நாடாளுமன்றத்தில் தீர்மானம் கொண்டு வந்தனர்.
அமெரிக்க நாடாளுமன்ற வரலாற்றில் இந்த தீர்மானம் முக்கியத்துவம் வாய்ந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதனையொட்டி இந்த ஆண்டு தீபாவளி தினத்தன்று நாடாளுமன்றம் வண்ண வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்படும். அன்று நடைபெறும் தீபாவளி கொண்டாட்ட நிகழ்ச்சியில் ஏராளமான எம்.பி.க்கள் செனட் உறுப்பினர்கள் கலந்து கொள்கின்றனர்.
நாடாளுமன்ற வளாகத்தில் தீபாவளியை கொண்டாடுவது இதுவே முதல் முறையாகும். அமெரிக்கவாழ் இந்தியர்கள் மற்றும் இந்துக்கள், சீக்கியர்கள், சமணர்கள் உள்ளிட்டோர் ஆண்டுதோறும் விசேசமாக கொண்டாடி வரும் பண்டிகை தீபாவளி என அந்த தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment