Wednesday, October 30, 2013
இலங்கை::சட்ட ரீதியான அடிப்படையிலேயே வடக்கில் காணிகள் சுவீகரிக்கப்பட்டதாக இராணுவம் அறிவித்துள்ளது.
பலவந்தமாக காணிகள் சுவீகரிக்கப்பட்டதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்களில் உண்மையில்லை என சுட்டிக்காட்டியுள்ளது.
பாதுகாப்பு தேவைகளுக்காகவே இந்த காணிக்ள சுவீகரிக்கப்பட்டுள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ருவான் வனிகசூரிய தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே நிறுவப்பட்டிருந்த இராணுவ முகாம்கள் புனரமைக்கப்பட்டு அபிவிருத்தி செய்யப்பட்டு வருவததாகக் குறிப்பிட்டுள்ளார்.
தென் அதிவேக நெடுஞ்சாலை அமைக்கப்பட்ட போது பொதுமக்களிடமிருந்து காணிகள் சுவீகரிக்கப்பட்டதாகவும் அதேபோன்று வடக்கில் பாதுகாப்பு நோக்கங்களுக்காக காணிகள் சுவீகரிக்கப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பாதுகாப்பு காரணிகளுக்காக இராணுவ முகாம்களை புகைப்படம் எடுக்க முடியாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பாதுகாப்பு காரணிகளினால் இவ்வாறு முகாம்களை புகைப்படம் எடுக்க அனுமதிக்க முடியாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
No comments:
Post a Comment